அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 10-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான் 8: 51-59

யோவான் 8: 51-59
இயேசு அவர்களிடம், ”ஆபிரகாம் பிறப்பதற்கு முன்பே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உடனிருப்பை வெளிப்படுத்துகின்றார். காலத்தைக் கடந்து இறைவன் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து 33 வருடங்கள் இந்த மண்ணக மாந்தரை மீட்டுப்பதற்கான நிகழ்வை அன்று யூதர்களுக்கு வெளிப்படுத்துகின்றார். இதனை அறியா வண்ணம் அவர்களால் உள்ளம் பாவக்கறைகளால் மறைக்கப்பட்டிருந்தது. எனவே அன்பர்களே நாமும் தவறுகள் செய்யும்போது இறையருளை முற்றிலுமாக இழக்கின்றோம். செய்த தவறை உணரும்போது மன்னிப்பு பெறும் போதும் இறைவனைத் தரிசிக்க முடியும்.
அன்பு இயேசுவே!நீர் அன்றும் இன்றும் என்றும் எம்மில் ஊன்றி வழி நடத்திட வரம் தாரும். ஆமென்.