அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 9-புதன்

இன்றைய நற்செய்தி

யோவான் 8:31-42

புனித மார்சுலின்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ; என்றார். யோவான் 8:32

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு உண்மையோடு நடக்கவும் உண்மையைப் பேசவும் ஆணையிடுகின்றார். எப்படி எனில் உண்மை பேசுபவர்கள் உண்மையிலேயே விடுதலை அடைவார்கள் என்கின்றார். இயேசு. ஆபிரகாம் வழிமரபினர் நாங்கள் ஒருபோதும் பொய்பேசுவதில்லை. ஆனால் திருசட்டத்தின் பெயரால் அனைவரையும் அடிமைபடுத்தி இவர்கள் மட்டும் சுதந்திரமாய் வாழ்ந்தனர். அந்தநிலைமையை இறைமகன் எடுத்துச் சுட்டிகாட்டுகின்றார். உண்மைநிலை என்ன வென்பதை உணர வைக்கின்றார். ஆனால் அந்த மக்களே ஏற்றுக் கொள்ளவில்லை. நமக்கும் அழைப்பு விடுக்கின்றார். பாவத்தை விடுத்து விடுதலை வாழ்வை அடைய அழைக்கின்றார். ஏற்போம்.

சுயஆய்வு

  1. நான் என் நிலை என்ன வென்பதை உணர்கின்றேனா?
  2. அப்படியானால் என்னுடைய முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் உமது துன்பங்களை நினைத்து என்னையே அர்ப்பணிக்கும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு