அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 8-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
யோவான் 8:21-30

யோவான் 8:21-30
இயேசு அவர்களிடம், ;நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்: நான் மேலிருந்து வந்தவன். நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல. யோவான் 8:23
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் இருப்பை வெளிப்படுத்துகின்றார். அதாவது நீங்கள் தந்தையால் படைக்கப்பட்டவர்கள் தங்களின் ஒருங்கிணைப்பை தந்தை விரும்புகின்றார். நீங்கள் சிதறுண்ட நிலையில் உங்களை ஒருங்கிணைக்க என்னை இந்த உலகிற்கு அனுப்பினார். நான் உமக்காக வந்து பல துன்ப துயரங்களை மேற்க்கொள்கின்றேன். நீங்கள் இன்னும் மனம் மாற மறுக்கின்றீர்கள். எனவே மேலிருந்து வந்த நான் தந்தையின் விருப்பம் அறிவேன். நீர் இவ்வுலகில் பிறந்தவர்கள். எனவே இறைவனின் இருப்பை உணர மறுக்கினறீர்கள்.
அன்பு இயேசுவே! உமது தந்தையின் ஆணைப்படி வாழ்ந்தது போல் நாங்களும் வாழ வரம் தாரும். ஆமென்.