அருள்வாக்கு இன்று

ஏப்ரல் 4-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 7:1-2,10,25-30

புனித இசிதோர்
தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆகவே கோவிலில் கற்பித்துக் கொண்டிருந்தபோது இயேசு உரத்த குரலில், ”நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன் என்பவை உங்களுக்குத் தெரியும். ஆயினும் நானாக வரவில்லை. என்னை அனுப்பியவர் உண்மையானவர். அவரை உங்களுக்குத் தெரியாது.” யோவான் 7:28

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு இந்த மண்ணகத்தில் பிறந்து 30 ஆண்டுகள் பகுப்பாய்வு செய்தும் மக்களின் துன்ப சூழலைக் கண்டு பிறகு மூன்றாண்டுகள் தன் போதனையாலும் புதுமைகளினாலும் பிளவு பட்ட மக்களின் போக்கைக் கண்டித்து வறியோருக்கு விடுதலை பெற்று தந்தும் தான் தந்தையின் ஆணைப்படி இவ்வுலதை மீட்டெடுக்க வந்தார். இவரே உண்மையான மெசியா என்பதை உணராத மக்களிடம் தன் தந்தை அறிவார் என்று அறிக்கையிடுகின்றார். அறிந்தும் அறியாதபடி இருக்கின்ற மக்களுக்கு நான் யார்? என்றும் அவர் எங்கிருந்து வந்தார் என்பதை உணர்த்துகின்றார். அன்பர்களே! இறையாண்மையை ஏற்றுப் புதுயுகம் படைப்போம்.

சுயஆய்வு

  1. நான் யார் என்ற இயேசுவின் வினா என்னைத் தொடுகின்றதா?
  2. உணர்வை நான் எப்படி வெளிப்படுத்துகின்றேன்?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை அறிந்து உம்மில் நானும் இணைந்து வாழும் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு