அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 3-வியாழன்
இன்றைய நற்செய்தி
யோவான் 5:31-47

யோவான் 5:31-47
"என்னை அனுப்பிய தந்தையும் எனக்குச் சான்று பகர்ந்துள்ளார். நீங்கள் ஒருபோதும் அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை. யோவான் 5:37
இன்றைய நற்செய்தியில் இயேசு உம்மைச் சான்று யார் என்பதை விளக்குகின்றார். அன்றைய படைப்பின்போது ஆதாமைத் தன் சாயலில் படைத்து அனுப்பினார். அவர்கள் முடிவடைந்த பிறகு தன் தந்தையின் சாயலைத் தன் மகன் வழியாக இவ்வுலகிற்கு அனுப்பினார். கடவுளைக் காணாத நம் தலை முறையினருக்கு இயேசுவே உன்னதச் சான்றாகவும் உண்மைச் சான்றாகவும் திகழ்கின்றார். அவரது பணி வாழ்வே இதற்குச் சான்று. சமுதாயத்தில் முடங்கிகிடப்போர் - வருந்துவோர் - அடிமைப்பட்டோர் போன்றோருக்கு உண்மை இறைமகனாக வந்து அவர்களின் துயர் துடைத்து அவர்களைத் துன்பத் துயரிலிருந்து மீட்டெடுத்துத் தன்னைப் பலியாக்கியதே உண்மைச் சான்று. மீண்டும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் அனைவருக்கும் சமாதானம் அளித்து மீண்டும் விண்ணகம் சென்றதும் சான்று. தன் அன்பு மக்களுக்குத் துணையாகத் துணையாளரை அனுப்பியதும் உண்மைச் சான்றே!
அன்பு இயேசுவே! நீர் உனது சாயலை என்னுள் திருமுழுக்கின் வழியாகப் பதித்துள்ளதை நான் உணர வரம் தாரும் ஆமென்.