அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 2-புதன்
இன்றைய நற்செய்தி
யோவான் 5:17-30

யோவான் 5:17-30
அவர் மானிடமகனாய் இருப்பதால், தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தையும் தந்தை அவருக்கு அளித்துள்ளார். யோவான் 5:27
இன்றைய நற்செய்தியில் இயேசு தன் நிலையை உணர்த்துகின்றார். தன் தந்தை தனக்கு அளித்துள்ள அதிகாரத்தைத் தெளிவு படுத்துகின்றார். அன்றைய சூழலில் இயேசுவைக் கடவுளின் மகனாக ஏற்றுக் கொள்ளாத அந்த மனிதர்களுக்கு இயேசு தரும் தீர்ப்பு. தந்தை தன் மகனுக்கு அனைத்து அதிகாரத்தையும் இந்த மண்ணில் தான் படைத்த மனித இனத்தை அழிவினின்று மீட்டெடுக்கவே தன் மகனை மரியின் வழியாக மண்ணில் பிறக்கச் செய்தார். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத யூத இனம் அவரை இறைமகனாகக் காணவில்லை. இவர்கள் மோயீசன் சட்டத்தையே வேத வாக்காகக் கொண்டிருந்தார்கள். அதனைத் தங்கள் விருப்பம்போல் நிறைவேற்றி மற்றவரை அழித்தனர். அதனை மாற்றியமைக்கவே இயேசுவின் வருகை. நாம் இதனை உணர்ந்து இறைமகனின் கனவுகளை நனவாக்குவோம்.
அன்பு இயேசுவே! நான் உமது சாட்சியாக வாழ வரமருளும் ஆமென்.