அருள்வாக்கு இன்று
ஏப்ரல் 1-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
யோவான் 5:1-16

யோவான் 5:1-16
ஓய்வு நாளில் இயேசு இதைச் செய்ததால் யூதர்கள் அவரைத் துன்புறுத்தினார்கள். யோவான் 5:16
இன்றைய நற்செய்தியில் இயேசு ஓய்வு நாள் என்பது எத்தகைய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றார். அஃதாவது ஓய்வு நாள் என்றால் இறைவனோடு துதிக்கவும், செபிக்கவும் இறைபிரசன்னத்தில் நம்மையே புதுபித்துக் கொள்ளவும் தான். அதாவது நமது செயல்கள் நல்லவையா? அல்லது தீயச்செயல்களா? என்பதை ஓர் ஆய்வு செய்து இறைவனுக்குகந்தச் செயல்களில் ஈடுபடுவதேயாகும். இதற்காகத் தான் ஓய்வுநாள் நம்மை நாமே சுயசோதனை செய்வதற்கு ஏற்ற நாள். ஆனால் உடல்குன்றிப் பல ஆண்டுகளாகக் கிடந்த ஓருவனுக்கு இயேசு குணமளித்து அவனை மனிதனாக நிலை நிறுத்துகின்றார். இது நற்செயலாகும். எனவே நமக்கு அழைப்பு விடுக்கின்றார். அடுத்தவின் துன்பதுயரில் பங்கேற்க ஓய்வு நாள் மேலானது.
அன்பு இயேவுவே! நான் சுயநலவாதியாக இராமல் கடந்து சென்று, ஓய்வு நாளாக இருப்பினும் பிறருக்கு உதவிடும் வரம் தாரும். ஆமென்.