அருள்வாக்கு இன்று

மார்ச் 30-சனி

இன்றைய நற்செய்தி

மத்தேயு 28:1-10

புனித இரவில் பாஸ்கா விருந்து

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

புனித இரவில் பாஸ்கா விருந்து
அருள்மொழி:

அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். மத்தேயு 28:8

வார்த்தை வாழ்வாக:

இன்று இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியை மரிய மகதலேனாலும், மரியாவும் விரைவாகச் சென்று தம் சீடர்களுக்கு அறிவிக்கின்றார்கள். இயேசுவின் உயிர்ப்பைப் பற்றி யூத அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுவார். கிறிஸ்தவர்கள் வெறுமையான கல்லறை வாசத்திலே வாழ்பவர்கள். ஆனால் இயேசுவின் உயிர்ப்பு முன் கூட்டியே அறிவிக்கப்பட்ட ஒன்றாகும். எனவே இயேசுவின் உயிர்ப்பு கிறிஸ்துவ சமயத்திற்கே மாபெரும் கொடு முடியாகும். இதுவே அன்றும் - இன்றும் - என்றும் கிறிஸ்துவத்தின் மாட்சிமையை துவங்கச் செய்யும் மாபெரும் உயிர்ப்பின் வெற்றியாகும். அன்றும் - இன்றும் உலகை ஏமாற்றி வரும் போலிகளின் வரிசையில் இயேசுவும் இடம் பெற்றிருப்பார். நமது சமுதாயமும் கல்லறையோடு சமாதியாகியிருக்கும். இயேசு உயிர்க்காவிட்டால் நமது விசுவாசம் வீணாணது என்கிறார் தூய பவுலடிகளார். (1கொ:15-11-14) ஆம் அன்பு சகோதரர்களே இயேசுவைப் போல் நாம் பல சுமையிலிருந்து உயிர்ப்போம் என்ற நம்பிக்கை நம்மில் உதயமாக வேண்டும் ஏனெனில் நமது பாவங்களைப் பாதாளத்தில் புதைத்து விட்டு மீண்டும் வெற்றி வேந்தனாக வெற்றி வாகை சூடி இம்மண்ணகம் நோக்கி மேலே உயிர்த்தார். இதை நிறைவில் கொண்டு நமது வாழ்வு அமைய வேண்டுகின்றோம்.

இறைவேண்டல்

அன்பு இயேசுவே உமது உயிர்ப்பு எமது மீட்பு என்பதை உணரும் வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு