அருள்வாக்கு இன்று

மார்ச் 29-வெள்ளி

இன்றைய நற்செய்தி

யோவான் 18:1-19 42


ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

ஆண்டவருடைய பாடுகளின் வெள்ளி
அருள்மொழி:

தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், “நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?” என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். யோவான் 18-26

வார்த்தை வாழ்வாக:

இன்று நாம் இயேசு தன் தந்தையின் விருப்பப்படி தன்னையே அகில உலக மக்களுக்காகக் கையளித்த நாளைக் கொண்டாடி அவரது துயரங்களை நினைவு கூர்கின்றோம். அன்று இயேசு தன் தாயை கடைசி நேரத்தில் நினைவு கூர்ந்து அவரைத் தனியாக விட்டுச் செல்லவில்லை இந்த உலக மாந்தர் அனைவருக்கும் தாயாக அன்னை உயர்த்தப்பட வேண்டும் என்ற நோக்கில் தன் அன்பு சீடரிடம் தன் தாயை ஒப்படைக்கின்றார். அன்று முதல் நம் அனைவருக்கும் தாயாகவும் விண்ணுக்கும் மண்ணுக்கும் வாய்க்காலாகவும் இருந்து துயரானவோரின் துயர் துடைப்பவளாகத் திகழ்கின்றாள். தன் மகன் விட்டுச் சென்ற மீட்பு திட்டத்தில் உடன் பங்கேற்பாளியாகப் பணியாற்றுகின்றாள். அன்பு சகோதரர்களே இயேசு இவ்வுலக மாந்தருக்காகத் துன்பங்கள் பலபட்டு காரி உமிழப்பட்டும் சிலுவை சுமந்தும் தன் மக்களுக்கு ஆறுதல் கூறியும் இந்த நாளில் தன் ஆவியை இறைவனிடம் ஒப்படைக்கப்பட்ட ஓர் புனித வெள்ளியாக நாம் நினைவு கூறுகின்றோம். ஆனால் இந்த வெள்ளியானது பாதாளத்திற்கு இறங்கி அங்குள்ளோருக்கும் மீட்பை வழங்கி மீண்டும் விடிவெள்ளியாக மூன்றாம் உயிர்த்தெழும் வெற்றி வாகை சூடும் என்ற அசையா நம்பிக்கை அன்றும் இன்றும் என்றும் நம்மில் நிலைத்திருக்கும். இதற்குச் சான்று பகர நாமும் நம்மைத் தூய்மைப்படுத்துவோம்.

இறைவேண்டல்

நாம் நமது குற்றங்களை இயேசுவிடம் இன்று வைத்து விட்டு மீண்டும் புத்துயிர் பெற்று புது வாழ்வு பெறுவோம் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு