அருள்வாக்கு இன்று

மார்ச் 28-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 13:1-15


ஆண்டவருடைய இரவு உணவு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

ஆண்டவருடைய இரவு உணவு
அருள்மொழி:

ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். யோவான் 13-14

வார்த்தை வாழ்வாக:

இன்றைய வாசகம் போதகர் இயேசு, யூதரின் பாஸ்கா விழாவை ஏகிப்திலிருந்து அவர்கள் விடுதலை அடைந்ததை நினைவூட்டும் விழாவாகவும், இயேசு தன் உடலைத் தன் படைப்பிற்காகப் பாவச் சூழலிலிருந்து வென்றெடுக்கின்றார். அதன் கொடுமுடியாக நற்கருணையை ஏற்படுத்தினார். அன்றைய சூழலில் யூதர்களின் விருந்தில் அடிமைகள் அவர்களுக்குப் பாதங்கள் கழுவி வரவேற்றனர். தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்கள் அடிமைகள் அல்ல. அவர்களும் உயர்ந்தவர்களே என்பதை உணர்த்தவே தன் சீடர்களின் பாதங்களைக் கழுவி அவர்களுக்குத் தன் உடனிருப்பை வெளிப்படுத்துகின்றார். உலகம் முடியும் வரை எந்நாளும் உங்களோடு இருக்கின்றேன் என்பதை உணர்த்தும் வகையில் நற்கருணையை ஏற்படுத்தித் தன் சீடர்களுக்குத் தன் உடலையே விருந்தாக அளிக்கின்றார்.
இவ்விருந்தில் பங்கு பெறுவோர் தூய்மையோடு இருக்க வேண்டும். ஆனால் என் விருந்தில் பங்கேற்போரில் தீயவனும் இருக்கின்றான். அவனே என்னைக காட்டிக் கொடுப்பான் என்பதையும் உணர்த்தி தவறு செய்பவனைச் சுட்டி காட்டுகின்றார். நற்கருணையை திருப்பலி அருளடையாளங்களை நிறைவேற்றக் குருவானவர்களையும் ஏற்படுத்திப் பெருமை சேர்க்கின்றார். எனவே நாம் இவ்விழாவினை தகுந்த முறையில் பங்கேற்போம்.

சுயஆய்வு

  1. உம்மைப் போல் நானும் பணிசெய்ய நல்ல மனம் என்னில் உள்ளதா?
  2. உம்மைப் போல அனைவரையும் அன்பு செய்யும் நல் மனம் உள்ளதா?

இறைவேண்டல்

இயேசுவே உமது மாட்சிமை இவ்வுலகம் முடியும் வரை எம்மில் நிலை பெற செய்தருளும்.ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு