அருள்வாக்கு இன்று

மார்ச் 24-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

மாற்கு 14:1-15:47


பாடுகளின் குருத்து ஞாயிறு

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

ஆண்டவருடைய குருத்து ஞாயிறு
அருள்மொழி:

இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார். மாற்கு 14-8

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் தலையை விலையுர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்த பெண்மணியின் செயலை அங்குள்ள மக்கள் வெறுக்கின்றனர். அந்த நிலையில் உங்களோடு எப்போதும் ஏழைகள் உள்ளனர். அவர்களுக்கு உவதி செய்யவாம். ஆனால் மனுமகனோ விரைவில் எதிரிகளிடம் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று விடுவார்கள் என்பதை முன் உணர்த்திய தந்தையே அவளது பாவங்கள் மன்னிப்பு பெற இயேசுவை விலையுர்ந்த தைலத்தால் அபிஷேகம் செய்கின்றார் என்பதை உணருவோம். நாம் நமது பாவங்கள் மன்னிப்பு பெற மனத்துயர் என்னும் தைலத்தால் கரைந்து இனிமேல் பாவம் செய்யமாட்டேன் என்ற மனவுறுதியுடன் தவக்காலத்தை அனுசரிப்போம்.

சுயஆய்வு

  1. நான் என் குற்றங்களைக் கலைகின்றேனா?
  2. அதற்கான எனது முயற்சி யாது?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இந்தத் தவக்காலத்தில் சுயதரிசனம் செய்ய வரம் தாரும். .ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு