அருள்வாக்கு இன்று

மார்ச் 18-திங்கள்

இன்றைய நற்செய்தி

யோவான் 8 1-11

இன்றைய புனிதர்


எருசலேம் புனித சீரில்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும் என்ற அவர்களிடம் கூறினார். யோவான் 8:7

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு விபசாரத்தில் பிடிபட்ட பெண்ணைப் பற்றி விளக்குகின்றார். எப்படி எனில் அன்றைய சூழலில் பெண்களை அடிமைப்படுத்தியும் ஓர் ஆண் பல பெண்களுடன் உறவு கொண்டும் தகாத முறையில் நடந்து கொண்டமையால் அவரிடம் அழைத்து வந்த பெண்ணை அவர்களைக் கொண்டே தீர்ப்பிடுகின்றார். ஒரு தனி பெண்ணாக விபசாரம் செய்ய முடியுமா? என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்தவே உங்களுள் பாவம் செய்யாதவன் கல் எரியட்டும் என்றார். எனவே அன்பு சகோதரர்களே இன்றைய காலச் சூழலில் நாம் பெண்களை எவ்வாறு நடத்துகின்றோம். அவர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு தர வேண்டும் என்பதையும் உணர்வோம். யாரையும் தீர்ப்பிட நமக்குத் தகுதியில்லை என்பதையும் மறவோம்.

சுயஆய்வு

  1. நான் என்னையும் என் அருகிலிருப்பாரையும் எப்படிக் காண்கிறேன்?
  2. நான் என் நிலையை அறிகிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் யாரையும் தீர்ப்பிட தகுதியற்றவன் என்பதை உணர்ந்து வாழ வரமருளும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு