அருள்வாக்கு இன்று

மார்ச் 9-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 18:9-14

இன்றைய புனிதர்


ரோம் பிரான்சிஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, "கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்" என்றார். லூக்கா 18:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு பரிசேயர், வரிதண்டுபவர் உவமையினை விளக்கி இங்கே யார் இறையரசிற்கு தகுதியுடையோர் என்பதை சான்றாகப் பதிவுச் செய்கின்றார். பரிசேயர் போன்று இன்றும் பணத்தால் உயர்ந்தவர்கள், தாங்கள் செய்வது அடுத்தவர் காணும் வண்ணம் தங்களையே உயர்த்தி பெருமிதம் காட்டி வாரி வழங்கும் நிலையில் இருக்கதான் செய்கிறார்கள். அதேவேளையில் ஏழைஎளியவர்களுக்கு உதவிடும்போது வலக்கைச் செய்வதை இடக்கை அறியாத வண்ணம் செய்யும் சான்றோர்களும் இருக்கின்றார்கள் என்பதை இந்த உவமையின் வாயிலாக அறிய முடிகிறது. தன்னைத்தானே தாழ்த்துகிறவன் உயர்த்தப்பெறுவான். உயர்த்துகிறவனோ தாழ்த்தப்பெறுவான்.

சுயஆய்வு

  1. நான் பாவி என்று என்னை அறிக்கையிடுகிறேனா?
  2. எந்த நிலையிலும் பெருமை பாராட்டாமல் இருக்கிறேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என் வலக்கைச் செய்வதை இடக்கை அறியாத வண்ணம் செய்யும் வரம் தாரும். ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு