அருள்வாக்கு இன்று

மார்ச் 4-திங்கள்

இன்றைய நற்செய்தி

லூக்கா 4: 24-30

இன்றைய புனிதர்


புனித கசிமீர்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. லூக்கா 4: 24

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் நிலைமையை அன்றைய யூதர்களிடையே இருந்த நிலைமையை விளக்குகின்றார். ஆம் சகோதர சகோதரிகளே இன்றைய காலத்திலும் இறைப்பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து இறைப்பணியாற்றுவோருக்கு சமுதாயத்தில் மதிப்பு இல்லை. அன்றைய சூழலில் யூதர்கள் தாங்கள் எதிர்பார்த்த மெசியா தங்கள் உயர் குலத்தில் வருவார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக மேலோங்கி இருந்த்து. இன்னும் ஒரு படி மேலே மெசியாவை ஏழை குடிலிலும் சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டோரிடையே கண்ட இயேசுவை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமையால் இவ்வாறு அவமதித்தனர். ஆனால் இயேசுவின் பணியோ தன் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதே கடமையாயிருந்தது.

சுயஆய்வு

  1. நான் இறைப்பணி ஆற்ற எந்த சோதனையிலும் ஏற்பேனா?
  2. சுயநலம், சுயகவுரவம் காணாது பணி புரிவேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! எந்த சோதனைகள் வந்தாலும் உம்மைப் போல் பணி செய்ய வரம் தாரும் ஆமென்.

தவக்காலம்
தவக்கால தினசரி சிந்தனைகள் 2024


அன்பின்மடல் முகப்பு