அருள்வாக்கு இன்று

மார்ச் 11-சனி

இன்றைய நற்செய்தி

லூக்கா 15:1-3,11-32

இன்றைய புனிதர்


கோர்டோபாவின் புனித யூலோஜியுஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்: மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்: மீண்டும் கிடைத்துள்ளான்’” என்றார். லூக்கா 15:32

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மனம் மாறியவனை பற்றி உவமையில் பேசுகின்றார் எப்படி எனில் தந்தையின் அரசிலிருக்கும் இரு பிள்ளைகளில் ஒருவன் இறை வார்த்தையின் படி வாழாமல் இவ்வுலக கவர்ச்சிகளுக்கு பலியாகி பெரும் பாவியாகின்றான். இறுதியில் தன் தவறை உணர்ந்து தன் பாவத்திற்காக மனம் வருந்தித் திருந்தி இறைவனிடம் வந்து மன்னிப்பு கேட்கின்றான். இதனைத் தந்தையும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டு தன் மகிழ்ச்சியை அனைவரோடு பகிர்ந்து கொள்கின்றார். இதைத் தான் அன்று பரிசேயருக்கும் சதுசேயருக்கும் இயேசு உவமையாகக் கூறினார். அதே வார்த்தைகளும் இன்று வாழும் நமக்கும் என்பதை உணருவோம், செய்த குற்றங்குறைகளை கலைவோம். மனம் வருந்தி இறை மகனிடம் மன்னிப்பு பெறுவோம் மனம் மாறுவோம் வாரீர்.

சுயஆய்வு

  1. நான் என் தவறுகளை நினைத்துப் பார்க்கின்றேனா?
  2. அவற்றிற்காக மனம் வருந்துகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் செய்த பாவங்களை நினைத்து மனம் வருந்தும் மனம் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு