அருள்வாக்கு இன்று
மார்ச் 7-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 23:1-12
இன்றைய புனிதர்

புனித பெர்பெத்துவா, பெலிசித்தா
மத்தேயு 23:1-12
புனித பெர்பெத்துவா, பெலிசித்தா
தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். மத்தேயு 23:12
இன்றைய நற்செய்தியில் இயேசு நாம் எவ்வாறு சமூகத்தில் கிறிஸ்துவின் மதிப்பீடுகளைத் தடம் பதிக்க வேண்டும். அதற்கான முறைகளை மோசேவின் காலத்திலும், இயேசுவின் காலச் சூழலில் வாழ்ந்தவர்களுக்கும் விளக்கிக் கூறிகின்றார். இறைமகனின் கூற்று 'பணிவிடை பெற அன்று பணிவிடை புரிய வந்தேன்”. இதன் கருப்பொருள் நாமும் உயர்ந்தவர் என்ற நிலையை மறந்து தாழ்ந்து மற்றவருக்கு எந்த வித பிரதி பலன் எதிர் பாராது பணிவிடை செய்யவே அழைக்கின்றார். தாழ்ச்சி என்பது இங்கே முதலிடம் வகிக்கின்றது. மண்ணகத்தில் இறைப்பணியின்மித்தம் தாழ்வு - இகழ்ச்சியடைவோர் இறைவன் முன் உயர்த்தப்படுவர். இவ்வுலகில் தன்னை உயர்த்திக் கொள்பவன் இறைவன் முன் தாழ்த்தப்படுவான். எனவே மறை போதனைக்கேற்ப வாழ அழைக்கப்படுகின்றீர்.
அன்பு இயேசுவே! நின் கனவுகளை நான் நனவாக்கிட தாழ்ச்சி எனும் வரம் தாரும் ஆமென்.