அருள்வாக்கு இன்று

மார்ச் 2-வியாழன்

இன்றைய நற்செய்தி

மத்தேயு 7: 7-12

இன்றைய புனிதர்


St. Agnes of Prague

புனித ஆக்னஸ்

தொகுத்து வழங்குபவர்
அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே. மத்தேயு 7 : 12

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு அனைவரையும் "ஒருவரை ஒருவர் உதவி செய்து கொள்ளுங்கள். பிரதி பலன் பாராது உதவி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நாம் விரும்புவதை நம் தந்தை நமக்கு அளிப்பார்" என்பதை விளக்குகின்றார். எனவே இறைமக்களாகிய நாம் மற்றவர்களுக்கும் நம்மிடம் உள்ளதைப் பகிர்ந்துக் கொள்வோம்.அப்போது நாமும் மனநிறைவுப் பெற்றுக் கொள்வோம். இத்தகைய உறவையே தந்தை விரும்புகின்றார். நாம் பகிர்ந்து கொள்ளும் உறவானது இரத்த உறவுக்குள் அல்ல. அதையும் தாண்டி அனாதைகளாய் உறவுகள் இன்றி இருப்போர்க்குப் பகிர்ந்தளிக்கவே இறைவன் விரும்புகின்றார். நாமும் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம்.

சுயஆய்வு

  1. நான் எனக்குக் கீழ் உள்ள நண்பர்களை இனம் காண்கிறேனா?
  2. அவர்களிடையே எனது உறவுப் பலப்படுகிறதா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னிலிருக்கும் அன்பைப் பிரதி பலன் பாராதுப் பகிர்ந்தளிக்கும் வரம் அருளும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு