அருள்வாக்கு இன்று
ஜனவரி 30-வியாழன்
இன்றைய நற்செய்தி
மாற்கு4:21-25
இன்றைய புனிதர்
ஏடன் புனித பாத்லிடிஸ்
மாற்கு4:21-25
ஏடன் புனித பாத்லிடிஸ்
“ஏனெனில், உள்ளவருக்குக் கொடுக்கப்படும் இல்லாதவரிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்”என்று அவர்களிடம் கூறினார். மாற்கு 4:25
இன்றைய நற்செய்தியில் இயேசு உள்ளவருக்குக் கொடுக்கப்படும் இல்லாதவரிடமிருந்து எடுக்கப்படும் என்கிறார். எப்படி எனில் இயேசுவின் மதிப்பீடுகளின் படி வாழ்ந்து இறைபிரசன்னத்தில் இருப்பவர்களுக்கு அனைத்தும் கொடுக்கப்படும். ஆவியின் ஆற்றல் இல்லாதவருக்கு உள்ளதும் எடுக்கப்படும் என்று பொருளாகும். ஏனென்றால் தமது படைப்பின் அனைத்திற்கும் எந்தவித ஊன்றும் கோராமல் அவைகளை கண்ணும் கருத்துமாக காக்கும் பொருட்டே தன் மகனை இவ்வுலகிற்கு மரியின் மகனாக பிறக்கச் செய்து அனைவரையும் இன்று வரை காக்கின்றார் நம் இறைவன் என்பதை உணர்வோமா!
அன்பு இயேசுவே! எமக்காக பிறந்து எமக்காக மரித்தீர். உமது பங்கேற்பில் நாங்களும் இணைய வரம் தாரும் ஆமென்.