அருள்வாக்கு இன்று

ஜனவரி 28-செவ்வாய்

இன்றைய நற்செய்தி

மாற்கு 3:31-35

இன்றைய புனிதர்


புனித தாமஸ் அக்கிவினாஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ; என்றார். மாற்கு 3:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தன் உண்மையான உறவுகளை வெளிப்படுத்துகின்றார். இந்த வசனத்தைத் தான் பிரிவினைச் சகோதரர்கள் அன்னை மரியாவை குறைபடுத்திப் பேசுவது. இதன் ஆழ்ந்தக் கருத்தை அறியாமையாலும் சுய நலத்திற்காகவும் வாழ்பவர்கள் கூறும் வார்த்தைகளே இவை. உண்மை என்னவென்றால் அன்னை மரியாள் வழியாக இறைவனின் திட்டம் நடைபெறவே மரியாவை இறைவன் தேர்ந்து கொண்டு அவரை எந்த ஒரு தீங்கும் அறியா வண்ணம் காத்து அவர் வழியாகத் தன் மீட்பை வெளிப்படுத்தி நிறைவு செய்தார். இன்று வரை ஆண்டவரின் விருப்பத்தை நிறைவேற்றுபவளாகவே மரியா திகழ்கின்றார். எனவே தான் இயேசு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் தாயும் - சகோதரர்களும் என்று கூறுவது தன் தாயை மகிமைப்படுத்தவே! எனவே நாமும் இதனை அறிந்து கொள்வோம்.

சுயஆய்வு

  1. மரியாள் மீட்பு திட்டத்தின் கருவியென உணர்ந்துள்ளேனா?
  2. உணர்ந்ததை மற்றவருக்கு அறிவிக்கின்றேனா?

இறைவேண்டல்

என் அன்பு ஆண்டவரே! எனக்குள் இருக்கும் தீயவைகளை அகற்றி உண்மையின் கருவியாக நான் வாழ வரம் தாரும்.

அன்பின்மடல் முகப்பு