அருள்வாக்கு இன்று
ஜனவரி 26-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
லூக்கா 1:1-4,4:14-21
இன்றைய புனிதர்
புனித திமோத்தி, புனித தீத்து
லூக்கா 1:1-4,4:14-21
புனித திமோத்தி, புனித தீத்து
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று" என்றார். லூக்கா 4:21:8
இன்றைய நற்செய்தியில் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். அங்குத் தொழுகைக்கூடத்தில் அமர்ந்தார். இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அதில் "ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும் சிறைப்பட்டோர் விடுதலை அடைவர். பார்வையற்றோர் பார்வைபெறுவர் என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலைச் செய்து அனுப்பவும் ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்." மறையுண்மையை இங்கே நீங்கள் கேட்ட மறைநூல்வாக்கு இன்று நிறைவேறியது. இன்ற ஆண்டவர் செய்த அறச்செயல்கள் இன்ற இரக்கச் செயலகளைச் செய்திட இரக்கத்தின் ஆண்டினை மேற்குறிக்கப்பட்டோருக்கு நாம் செய்யும்போது அருள்தரும் ஆண்டாக இவ்வாண்டு முடியும் என்று நமக்கு உற்சாகத்தைத் தருகின்றார்.
அன்பு இயேசுவே! நீர் விரும்பிய இறையரசு மண்ணகம் காணும் பேற்றினைத் தாரும். ஆமென்.