அருள்வாக்கு இன்று
ஜனவரி 25-சனி
இன்றைய நற்செய்தி
மாற்கு 16:15-18
இன்றைய புனிதர்
திருத்தூதர் பவுல் மனமாற்றம்
மாற்கு 16:15-18
திருத்தூதர் பவுல் மனமாற்றம்
நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்: நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். மாற்கு 16:16
இன்றைய நற்செய்தியில் நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெறுவோர் கண்டிப்பாக அனைத்து தீய செயல்களிலிருந்து விடுதலை பெறுவர் என்பதைப் பற்றி இயேசு கூறுகின்றார். நாம் இன்றைய மாறிவரும் கலாச்சாரச் சூழலில் உலக மாயைகளுக்குச் சிக்கி விடாமல் நிறைவாழ்வு பெறும் பொருட்டு நாம் பெற்றுக் கொண்ட திருமுழுக்கை அறிக்கையிடும் பொருட்டும் நமது வாழ்வு அமைய வேண்டும். நாம் இறைவார்த்தையில் கண்டவற்றை அறிந்தவற்றை அடுத்தவருக்கு அறிவிக்கும்போது நாம் இறைமகனின் பணியைச் செய்கின்றோம். மற்றவர்களும் இறைவனின் படைப்புகளே! இதனை மனதில் கொண்டு மனம் திருந்தி நற்செய்தியை பறைசாற்றுவோம் வாரீர். சமுதாயத்தில் நலிந்தோரை நாடுவோம் வாரீர்.
அன்பு இயேசுவே! நான் எனக்காக மட்டுமன்றி பிறருக்காகவும் வாழும் பேற்றினைத் தாரும். ஆமென்.