அருள்வாக்கு இன்று

ஜனவரி 23-வியாழன்

இன்றைய நற்செய்தி

மாற்கு. 3: 7-12

இன்றைய புனிதர்


புனித எமரென்டிணா

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

தீய ஆவிகளும் அவரைக் கண்டபோதே அவர்முன் விழுந்து, “இறைமகன் நீரே” என்று கத்தின. மாற்கு 3:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு திரளான பலவித நோய்கள் உள்ளோரை குணப்படுத்திக் கொண்டே வருகையில் தீய ஆவிகள் இறைமகனை நோக்கி நீரே இறைமகன் என்று கூக்குரலிடுவதை நாம் காண்கின்றோம். தீய ஆவிகளும் அவருக்கு அடிபணியும்போது நாம் எவ்வாறு இறைமகனுக்குப் பணி செய்யக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அன்றைய சூழலில் நடந்தவை எல்லாம் இன்றும் பெருகி விட்ட நிலையில் நாம் எவ்வாறு இறைமகனை நமக்குள் இருத்தி அவரின் மதிப்பீடுகளைச் செய்ய வேண்டுமென்று நாம் அறிந்து கொள்வது அவசியம். விவிலியத்தை மறுவாசிப்புச் செய்து இன்றைய சூழலுக்கேற்றவாறு நமது பணிகள் அமைய வேண்டுமென்று இயேசு நமக்கு உணர்த்துகின்றார் ஏற்போமா?

சுயஆய்வு

  1. இறைமகன் முன் என் நிலை என்ன?
  2. அதற்கான மனதினை கொண்டுள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம்மை முழுமையாகத் திருமறையின் மூலம் அறிந்து தியானித்து வாழ்வாக்கிட வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு