அருள்வாக்கு இன்று

ஜனவரி 20-திங்கள்

இன்றைய நற்செய்தி

மாற்கு 2:18-22

இன்றைய புனிதர்


புனித செபஸ்தியார்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

ஆனால் மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.மாற்கு 2:20

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு நோன்பு பற்றிய அவசியத்தை விவரிக்கின்றார். அன்று யோவான் சீடர்கள் நோன்பிருப்பதை கண்டு இறைமகனிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு இயேசு மணமகனாகிய நான் அவர்களோடு இருக்கும் வரை அவர்களுக்கு எல்லாம் கிடைக்கப்பெறும் ஆனால் மணமகன் அவர்களை விட்டு பிரியும் போது நோன்பு அவர்களுக்கு தேவை, என்று கூறுகின்றார். ஆம் இன்றைய சூழலில் இறைமகன் அவரது வார்த்தை நமக்குள்ளும், நாம் அவருக்குள்ளும் சங்கமிக்கும் போது நோன்பு என்பது இதில் அடங்கி விடும். நாம் ஒவ்வொருவரும் அவரது மறையுடலாக இருக்கின்றோம். எனவே மறையுடலான இறைமகனின் ஒரு சிறு நரம்பு பழுதடைந்தாலும் நாம் பாவச் சூழலில் இருக்கின்றோம் என்பதை குறிக்கின்றது. எனவே நாம் எப்போதும் இறைசித்த்திற்கு ஏற்றவர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம்.

சுயஆய்வு

  1. நோன்பு என்ற பெயரில் என்னை விகாரப்படுத்தி கொள்கின்றேனா?
  2. அல்லது என் உள்ளத்தை மறைவாக உள்ள இறைவன் காணும் வண்ணம் உள்ளேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! நான் இறைமகனின் ஒரு அங்கமாக திகழ எமக்கு அருள் வரங்களை பொழிந்தருள வேண்டி மன்றாடுகின்றோம். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு