அருள்வாக்கு இன்று

ஜனவரி 19-ஞாயிறு

இன்றைய நற்செய்தி

யோவான் 2: 1-11

இன்றைய புனிதர்


புனித ஃபபியான்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ``திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். யோவான் 2:2

வார்த்தை வாழ்வாக:

திருமண வீடுகளில் முதற் பந்திகளில் பணக்காரர்களும், செல்வாக்கு நிறைந்தவர்களும் திராட்சை ரசம் குறைபடாமல் கிடைத்து விட்டது. ஆனால், கடைசிப் பந்தியில் அமர்ந்த ஏழை, எளியவர்கள், ஒதுக்கப்பட்டவர்கள், முதலியோருக்கு இரசம் குறைபட்டுவிட்டது. மற்றவர்கள் அதைப் பற்றி அதிகம் அக்கறைப்பட்டுக்கொள்ளாத சூழலில்தான் அன்னை மரியா துணிந்து, நீதியுணர்வுடனும், நம்பிக்கையுடனும் இறைமகன் இயேசுவை அணுகுகிறார். தனது நேரம் வரவில்லை என்று இயேசு மறுப்பு தெரிவித்தபிறகும்கூட அவரை வலியுறுத்தித் தண்ணீரைத் திராட்சை இரசமாய் மாற்றும் அருஞ்செயலை, தன் முதல் அற்புதச் செயலை இயேசு நிறைவேற்றக் காரணமானார்.

சுயஆய்வு

  1. குறைகள் காறும்போது அன்னை மரியாளைப் போல் செயல்படுகின்றேனா?
  2. இதற்காக என் முயற்சிகள் என்ன?

இறைவேண்டல்

நீதியின் நாயனனே ஆண்டவரே, அன்னை மரியா வழியாக உமது நீதியை நிலைநாட்டியதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். இறைநீதியை நிலைநாட்ட எங்களுக்கு வரம் அருள்வீராக.

அன்பின்மடல் முகப்பு