அருள்வாக்கு இன்று

ஜனவரி 17- வெள்ளி

இன்றைய நற்செய்தி

மாற்கு 2:1-12

இன்றைய புனிதர்


வனத்து புனித அந்தோனியார்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“நான் உனக்குச் சொல்கிறேன், நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு உனது வீட்டுக்குப் போ” என்றார். மாற்கு 2:11

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு முடக்குவாதக்காரனுக்குக் குணமளிக்கின்றார். எப்படிஎனில் முடக்கு வாதக்காரனை நோக்கி “உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார். அவன் நோய் குணமானது. இரண்டும் அவனுக்கு நடந்துள்ளது. பாவச்சுமையாலும் நோய்கள் தாக்கும் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும். தன் வினை தன்னைச் சுடும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. ஆம் இறைமக்களே, நாம் அடுத்தவருக்கோ அல்லது தமது உறவுகளுக்கோ மாசுபடியோ தவறு செய்யக் கூடாது. இறைவனின் படைப்பில் அனைவரும் ஒன்றே என்ற நிலை நமக்குள் உருவெடுக்க வேண்டும். அப்போது இறையரசை நாம் கட்டியெழுப்ப முடியும் பாவச்சுமையால் நோயின் பிடியில் சிக்கும் மாந்தரை நாமும் காக்க முடியும். எனவே நாம் நம்மைத் தெளிவுபடுத்திக் கொள்ள மறைநூலை நன்கு பொருள்பட வாசித்துத் தியானிக்க வாழ்வாக்கிட ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்

சுயஆய்வு

  1. நான் குணப்படுத்தும் ஆற்றலைப் பெற நான் என்ன செய்கின்றேன்?
  2. அதற்கான பயிற்சி, பாசறைகளை நாடி மறைநூல் விளக்கம் பெறுகின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது வார்த்தைகள் பலவித ஆற்றலைக் கொண்டுள்ளது. இதனை நான் தெளிவாகக் கற்று பயன் பெற வரம் அருளும். ஆமென்

அன்பின்மடல் முகப்பு