அருள்வாக்கு இன்று
ஜனவரி 15-புதன்
இன்றைய நற்செய்தி
மாற்கு 1:29-39
இன்றைய புனிதர்
புனித வனத்து சின்னப்பர்
மாற்கு 1:29-39
புனித வனத்து சின்னப்பர்
"இயேசு விடியற்காலை கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்படுச் சென்றார். அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்". மாற்கு 1-35
இன்றைய நற்செய்தியில் இயேசு தனிமையில் இறைவனோடு அதிகாலை நேரத்தில் உரையாடுகின்றார். தான் வந்துள்ள இந்த மண்ணகம் பல சோதனைகளைக் கொண்டுள்ளது. இதனை வெல்ல வேண்டுமானால் தந்தையின் அருள் அவருக்குத் தேவைப்பட்டது. எனவே தான் அதிகாலை செபம் இறைவனுக்கு உகந்த நேரம். எனவே தான் ஒவ்வொரு நாளும் செய்யப் போகின்ற பணிக்கு முத்தாய்ப்பாகக் தந்தையின் ஆசிரோடு செய்கின்றார். ஆம் அன்பர்களே! நமக்கும் இது ஒரு சான்று. நாம் பெயரளவில் செபம் செய்தால் மட்டும் போதாது. நாம் இறைவனை நமக்குள் தாங்கிச் செல்லும்போது தான் எல்லாம் நிறைவேறும் என்பதற்கு இயேசுவின் செபம் நமக்குச் சான்றாக அமைகின்றது. இதனை நாமும் கடைபிடிப்போமா?
அன்பு இயேசுவே! உம்மை என்றும் பற்றிக் கொண்டு நீர் விட்டுச் சென்ற இறையாட்சியின் கருபொருளை அடையும் வரம் தாரும். ஆமென்.