அருள்வாக்கு இன்று
ஜனவரி 14-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 10:28-33
இன்றைய புனிதர்
புனித தேவசகாயம் பிள்ளை
மத்தேயு 10:28-33
புனித தேவசகாயம் பிள்ளை
ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். மத்தேயு 10:28
இன்றைய நற்செய்தியில் இயேசு, சீடர்கள் குருவைப் போல் ஆகட்டும். பணியாளர் தம் தலைவரைப் போல் ஆனட்டும். அதுவே போதும். நீங்கள் காதோடுகாதாய் கேட்பதை நீங்கள்மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல் உடலைக் கொள்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் தள்ளி அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். ஏனெனில் ஒவ்வொருவருடைய தலைமுடிகள் அனைத்தும் எண்ணப்பட்டுள்ளன. இறைமகனுடைய மண்ணுலக வருகையின் உச்சக்கட்டம் தான் தம் சீடர்களுக்கு அவர் இடும் பணியாகும். எந்த மக்களுக்காக மண்ணகம் இறங்கினரோ அவர்கள் எல்லாரும் ஒன்றாக இன்புற்று இருக்க வேண்டும் என்பதே இறைதிட்டம். எனவே அதற்காக இவ்வுலகச் சவால்களைக் கண்டு துவண்டுப் போகாதீர்கள். தூயஆவியார் உங்களோடு பயணிக்கின்றார்.
அன்பு இயேசுவே! உமது வருகையின் முழுமையை உணர்ந்து வாழ வரம் தாரும். ஆமென்.