அருள்வாக்கு இன்று
ஜனவரி 13-திங்கள்
இன்றைய நற்செய்தி
மாற்கு 1:14-20
இன்றைய புனிதர்
புனித ஹிலிரி
மாற்கு 1:14-20
புனித ஹிலிரி
இயேசு அவர்களைப் பார்த்து, “என் பின்னே வாருங்கள்: நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ” என்றார். மாற்கு 1:17
இன்றைய நற்செய்தியில் இயேசு இவ்வுலகப் பயணம் எதற்காக வந்தாரே அப்பணிக்குத் தேவையான பணியாட்களுக்கு அழைப்பு விடுக்கினறார். அழைப்புப் பெற்றவர்கள் எந்த மாறு கருத்தும் கூறாமல் இயேசுவை பின் தொடர்கின்றனர். அன்று அவர்கள் இயேசுவை பின் தொடர்ந்து அவரது ஆசியைப் பெற்றுப் பணிசெய்ததினால் தான் இன்று கிறிஸ்துவம் உலகெங்கும் வேருன்றி இருக்கின்றது.
அன்பார்ந்தவர்களே! அன்று இயேசு எந்த வித பொன்னோ- பொருளோ கொண்டு தன் சீடர்களைத் தேர்ந்துக் கொள்ளவில்லை. தன் தந்தையின் அருட்கொடைகளை மட்டும் பெற்று உலகலாவிய சமயத்தைத் தோற்றுவித்தார். அவ்வாறே நம்கும் அழைப்பு விடுக்கின்றார். எந்த வித நிபந்தனையற்ற அழைப்பு அன்பு என்ற வித்தை இவ்வுலகில் அயலானுக்கும் ஊன்ற நமக்கு அழைப்பு விடுக்கின்றார். ஏற்போமா!
அன்பு இயேசுவே! உம் அழைப்பு எங்களுக்கு நல் சிந்தனைகளை அளித்து எம்மைச் சுற்றியுள்ளவருக்கு அன்பு காட்ட வரம் அருளும். ஆமென்.