அருள்வாக்கு இன்று

ஜனவரி 11-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 3:22-30

இன்றைய புனிதர்


புனித தியோடோசியஸ் செனொபோர்க்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

“அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்: எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார். யோவான் 5:30

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவின் முன்னோடியாக நான் வந்தேன். மேடுப்பள்ளங்களை சமமாக்கவே வந்தேன். அவரது செல்வாக்கு உயர வேண்டும் என் செல்வாக்கு குறைய வேண்டும். இதையே நான் விரும்புகின்றேன். என்கிறார். ஆம் இறைமக்களே! நாமும் இயேசுவின் பணிகளை வெகுதாழ்மையுடன் சிரமேற் கொண்டு எந்த வித சுயநலமுமின்றி சமுதாயத்தில் நலிந்து கிடக்கும் மக்களுக்குப் பணியாற்றவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். மக்கள் பணியே மகேசன் பணி என்பதற்கேற்ப, நம்மையே அடுத்தவர் நலனுக்காக அர்ப்பணிப்போம். ஏற்றத் தாழ்வுகளை தவிர்ப்போம். இறைவனில் அனைவரும் சமம் என்ற நிலையில் வாழ்வோம். அப்போது நாம் இறைவன் முன் செல்வாக்கு பெறுவோம்.

சுயஆய்வு

  1. என்னை நான் தாழ்த்துகின்றேனா?
  2. இறைமகன் பணியில் என் பங்கு என்ன?

இறைவேண்டல்

அன்பான இயேசுவே! பிறரை அன்பு செய்து, வாழும் பேற்றினை வழங்கி வாழ வரமருளும்.ஆமென்

அன்பின்மடல் முகப்பு