அருள்வாக்கு இன்று

ஜனவரி 9-வியாழன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 4:14-22

இன்றைய புனிதர்


கான்டபரி நகர் புனித ஆட்ரியன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?" எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர்.லூக்கா 4-22

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசுவின் வாயினின்று தோன்றிய அருள் மொழிகளைக் கேட்டு அனைவரும் வியந்தனர். அப்படி என்ன பேசினார்? “ஆண்டவரின் ஆவி என்மேல் உள்ளது. என்னை அருளபொழிவு செய்துள்ளார்.” எதற்காக? ஏழைகளுக்கு நல் போதனைகளை வழங்க, அடிமைப்பட்டோருக்கு விடுதலை பெற்று தரவும், பார்வையற்றோர் தெளிவான பார்வை பெறவும், ஏழை பணக்காரன் வேற்றுமை பாராது கடந்து சென்று பணியாற்றவும், தன் அன்பு மக்களை வழிநடத்தவும் இறைவன் இயேசுவை அனுப்பினார் என்பதே உண்மை. மேற்கண்ட வார்த்தைகள் அனைத்தும் நல்ல பண்பட்ட நிலத்தில் ஊன்றப்படின் அது ஒன்றுக்கு முப்பது-நூறாகப் பயன் தரும் என்பதை இங்கே விளக்குகின்றார். ஆம் சகோதரர்களே நமது தீய எண்ணங்ககளைக் கலைந்து இறைமகனின் வார்த்தைகள் நமது இதயத்தில் ஊன்றபட நாம் நல் விளைநிலமாக மாறுவோம்.

சுயஆய்வு

  1. நான் பண்பட்ட நிலமாக உள்ளேனா?
  2. அடுத்தரையும் மாற்ற என் நிலை என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உம் வார்த்தைகள் என் வாழ்வில் பாதாளம் வரை ஊடுருவிச் சென்று என்னையும் அடுத்தவரையும் மாற்றும் வரம் தாரும்.ஆமென்.

அன்பின்மடல் முகப்பு