அருள்வாக்கு இன்று

ஜனவரி 8-புதன்

இன்றைய நற்செய்தி

மாற்கு 6:45-52

இன்றைய புனிதர்


புனித அப்பொலினாரிஸ்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

பிறகு அவர்களோடு படகில் ஏறினார். காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு கடல்மீது நடந்து செல்கின்றார். கப்பலில் காற்றினால் அலைமோதிக் கொண்டிருந்த மக்களை ஆற்றுபடுத்துகின்றார். கலங்காதீர், நான் என்றும் உம்மோடு என்பதை நினைவு கூர்கின்றார். நாம் இறைதன்மையை இழந்து உலக நாட்டங்களில் லயிக்கும்போது இறைவனை இழந்து விடுகின்றோம். அவரது உடனிருப்பை உணரும் வண்ணம் நாம் மாறும்போது இறைவனை உணருகின்றோம். எனவே தான் கப்பலை ஆட்டு வைத்த காற்று, இறைமகன விரலைக் கண்டதும் அடங்கிப் போகின்றது. இயற்கையும் இறைவனை உணரும்போது, நாமும் நமது சிந்தனைகளை அடுத்தவரின் நலனில் பதிக்கும் இறைதன்மையைப் பெறுகின்றோம் என்பதை இந்த நிகழ்வின் மூலம் உணர்கின்றோம். இதனை வாழ்வில் ஏற்போம்.

சுயஆய்வு

  1. எனக்குள் இருக்கும் தூய ஆவியாரை உணர்கின்றேனா?
  2. தடையைத் தகர்த்து உணர என் முயற்சி என்ன?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! உமது இருத்தல் என்னில் சங்கமிக்க வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு