அருள்வாக்கு இன்று
ஜனவரி 7-செவ்வாய்
இன்றைய நற்செய்தி
மாற்கு 6:34-44
இன்றைய புனிதர்
புனித ரெய்மொண்ட் பென்னாபோர்த்
மாற்கு 6:34-44
புனித ரெய்மொண்ட் பென்னாபோர்த்
இன்றைய நற்செய்தியில் இயேசு, தம் மக்களைத் தன் தந்தையின் ஆணைப்படிச் சந்திக்கின்றார். எதற்காக மண்ணகம் இறங்கி வந்தோரோ அதன் உச்சக் கட்டம் தான் இந்த இரண்டு மீன்களும் ஐந்து அப்பங்களும் பலுகிப் பெருகி மக்களின் துயர்-பசியைத் துடைத்தது. மாபெரும் அடையாளம். காரணம் இயேசு நமக்குள்ளும் நாம் அவருக்குள்ளும் சங்மமாகும்போது தூய ஆவியாரின் ஆற்றல் நம்மில் ஊடுருவி நம்மை ஆட்கொள்ளும். அவரது நாமத்தை மனம் உருகி உச்சரிக்கும்போது சரீரபசி மறந்து ஆன்ம தாகம் மேம்படும். எனவே தான் இறைமகன் இந்தச் சிறு உணவைக் கொண்டு பலருடைய வயறுப்பசியைப் போக்கி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். எனவே அழிந்துபோகும் உணவிற்காக அன்றி நிறைவாழ்வுத் தரும் உணவிற்காகக் கடந்து செல்வோம். எந்தச் சொத்தும் நிலையல்ல என்பதை உணருவோம். எனவே நமக்குள்ளதை மற்றவருக்குப் பகிர்வோம். பகிர்தலின் வெளிப்பாடே இந்தப் புதுமை என்பதைப் பதிவு செய்வோம்
அன்பு இயேசுவே! எனக்குள்ளதை அடுத்தவருக்குப் பகிர்ந்து வாழும் வரம் தாரும். அமென்.