அருள்வாக்கு இன்று
ஜனவரி 6-திங்கள்
இன்றைய நற்செய்தி
மத்தேயு 4:12-17,23-25
இன்றைய புனிதர்
புனித ஆந்திரே பெசெத்
மத்தேயு 4:12-17,23-25
புனித ஆந்திரே பெசெத்
அது முதல் இயேசு, 'மனம் மாறுங்கள் ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது" எனப் பறைசாற்ற தொடங்கினார். மத்தேயு 4:17
இன்றைய நற்செய்தியில் இயேசு இறையாட்சியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். எப்படியெனில் சட்டத்தின் பிடியில் அகப்பட்டுத் துயறுற்றோர் கவலைபட வேண்டாம். இனி உங்கள் துன்பங்களைப் போக்கி உமக்கு நிறைவைத் தரவே நான் இவ்வுலகிற்குத் தந்தேன். ஒடுக்கப்பட்டோர், துயருவோர், பெண்கள், ஊனமுற்றோர், நோயுற்றோர் உங்கள் குறைகளைப் போக்கி இறைவனில் இன்புறவே என்னை என் தந்தை உங்களுக்காகக் அனுப்பியுள்ளார். நானும் என் பெற்றொருடன் 30 வயது வரை வாழ்ந்து இவ்வுலகின் செயல்களைப் பகுப்பாய்வு செய்தேன். இதோ உமக்காக வந்துவிட்டேன். மனம் மாறுங்கள். உங்களுக்கு இறைவனுடைய ஆட்சி உம்மை நெருங்கி வருகின்றது. அதனைச் சுவைக்க, ருசிக்கத் தயாராகுங்கள் என்று அழைப்பு விடுக்கின்றார். இதுவே நமக்கும் இறைமகன் தரும் அழைப்பு ஏற்போமா?
அன்பு இயேசுவே! உமது வருகையின் நோக்கத்தை அறிந்துச் சுவைத்து வழி நடத்தும் வரம் தாரும். ஆமென்.