அருள்வாக்கு இன்று
ஜனவரி 5-ஞாயிறு
இன்றைய நற்செய்தி
மத்தேயு 2:1-12
இன்றைய புனிதர்
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
மத்தேயு 2:1-12
ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா
இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. மத்தேயு 2-3
இன்றைய நற்செய்தியில் ஏரோது உள்பட எருசலோம் நகரமே கலங்கியது. ஏன்? எதனால்? அன்று அவர்கள் திருசட்டத்தின் பெயரால் சாதி, சமயம், ஏழை, பணக்காரன், ஊனமுற்றோர், பாவிகள், பெண்கள் அனைவரும் சீரழிக்கப்பட்டு யூதவர்க்கம் தான் கடவுளின் மக்கள் என்ற இறுமாப்புடன் அரசாண்டார்கள். கடவுளின் பார்வையில் மனித இனம் ஒட்டு மொத்தமாக இறைவனின் பிள்ளைகள். இதனை வேறுபடுத்திப் பல பேராசைகளால் மக்கள் அன்று தன் நிலையை மறந்தார்கள். அப்படிப்பட்ட மக்களுக்குத் தான் இறைமகன் பிறப்பு கலக்கத்தை ஏற்படுத்துகின்றது. ஆனால் விளிம்பின் ஓரத்திற்கு தள்ளப்பட்ட வறியோர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தனர் வானவர் கீதம் பாடி. எனவே தான் அன்று எருசலேம் கலங்கியது. இன்றும் சுயநலங்களால் அனைவரையும் ஏமாற்றி அபகரித்துச் சொத்து சேர்க்கும் கூட்டம் மதவெறி சாதிவெறி போன்றவர்களுக்கும் இறைமகன் ஓர் அதிர்ச்சியை தரும் சக்தியாக திகழ்கின்றார் என்பதை பதிவு செய்து வாழ்வோம்.
மழலை மன்னவா! உமது பிறப்பை நினைவு கூறும் ஒவ்வொரு வருடமும் நான் புதுப்படைப்பாக மாற வரம் தாரும். ஆமென்.