அருள்வாக்கு இன்று

ஜனவரி 4-சனி

இன்றைய நற்செய்தி

யோவான் 1:35-42

இன்றைய புனிதர்


புனித எலிசபெத் ஆன் செடோன்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

இயேசு அப்பக்கம் நடந்து சென்றுகொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, "இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி" என்றார். யோவான் 1:36

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் யோவான் இறைமகனை பார்த்து இதோ இயேசுவை சுட்டிகாட்டி இவரே கடவுளின் ஆட்டுகுட்டி என்கிறார். ஏனென்றால் தான் படைத்த மனிதகுலம் பாதை மாறிப் பல சிக்கலில் சிக்கிதவிப்பதையும் சிலரின் ஆதிக்கப் பிடியிலிருந்து அவர்களைக் காக்கவும் தன் தலைபேரான ஒரே மகனைச் செம்மறிப்புருவையாக இவ்வுலகின் பாவங்களுக்குப் பலியாக்க அனுப்பியுள்ளார் என்பதை யோவான் சுட்டிக் காட்டுகின்றார். இதனை நாம் எத்தனை பேர் உணர்ந்துள்ளோம். கிறிஸ்து பிறப்பின் மேன்மை தான் என்ன என்பதையும் நாம் உணர்ந்துள்ளோமா? புத்தாடை பரிசுப் பொருட்கள் உன்று தங்களின் தேவைகளை உணர்கின்றோமே தவிர அடுத்தவரின் நலனை நம் மனதில் நினைக்கின்றோமா?

சுயஆய்வு

  1. இறைமகனின் மனிதபிறப்பு எதற்காக என்பதை உணர்ந்துள்ளோனா?
  2. அதற்கான செயல்பாடுகள் என்னில் எவ்வாறு உள்ளது?

இறைவேண்டல்

தன் மக்களின் துயர் துடைக்க மண்ணகம் இறங்கிய இயேசு பாலனே என்னையும் உம் நிழலில் சேர்த்து உம் பணியாற்ற நல் வரம் தாரும். ஆமென்.

அன்பின்மடல் முகப்பு