அருள்வாக்கு இன்று

ஜனவரி 2-வியாழன்

இன்றைய நற்செய்தி

யோவான் 1:19-28

இன்றைய புனிதர்


புனித பேசில், நசியான் கிரகோரி - ஆயர்கள்

தொகுத்து வழங்குபவர்
திருமதி அருள்சீலி அந்தோணி

அருள்மொழி:

யோவான் அவர்களிடம்,“நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்“ யோவான் 1: 26

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் அன்றைய சூழலில் பாவ சுமைகள் நிறைந்து மக்கள் துன்பத்திற்குள்ளானபோது இறைமகனுக்கு முன்பாக வந்து மேடுபள்ளங்களைச் சமமாக்க வந்தவரே இந்த யோவான். அவர் நீரினால் திருமுழுக்குக் கொடுத்துத் தனக்குப் பின் வருவபர் தூய ஆவியின் பிரசனத்தில் உங்களிடையே குடிக்கொண்டிருப்பதை உணர்த்துகின்றார். ஆம் இறைமக்களே திருமுழுக்குப் பெற்ற நாம் தூயஆவியின் பிரசனத்தில் இருக்கின்றோம் என்பதை நாம் பல நேரங்களில் மறந்து இவ்வுலகம் நிலையென நினைத்துப் பொருளாசை- பொன்னாசைப் போன்ற பேராசைகளால் நாளுக்கு நாள் பாவசேற்றில் விழுகின்றோம். இவற்றிலிருந்து விடுபடக் குழந்தை இயேசுவின் பிரசன்னம் நம்மை வழி நடத்த வேண்டுவோம்.

சுயஆய்வு

  1. திருமுழுக்கினால் என்னில் நிறைந்தவரை இனம் காண்கின்றேனா?
  2. இனம் கண்டு அவரின் ஆற்றலோடு இடுத்தவரை நேசிக்கின்றேனா?

இறைவேண்டல்

அன்பு இயேசுவே! என்னில் இருக்கும் மாசுகளைக் கழுவி அடுத்தவரின் நலம் காணும் அருளைத் தாரும் ஆமென்.

அன்பின்மடல் முகப்பு