திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

2024 டிசம்பர் 20-ஆம் நாள்-திருவருகைக் காலத்தின் மூன்றாம் வாரம் - வெள்ளிக்கிழமை

“இயலாதவற்றையும் நடத்திவைக்கும் இறையருள்”

வாசகங்கள்: எசாயா 7:10-14; லூக்கா 1:26-38


மறைநூல் வாக்கு:

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். (லூக்கா 1:29)

சிந்தனை:

மீட்பு திட்டத்தில் மிக முக்கியமான ஒரு தருணம் கபிரியேல் தூதர் மரியாவை சந்தித்த நேரம் தான். “உம் சொற்படியே ஆகட்டும்” என்ற வார்த்தையைக் கூறி, கடவுளின் தாயாக இருப்பதற்கு மரியா சம்மதித்தபோது தான், இரத்தமும், சதையும் கொண்ட கருவாக மரியாவின் உதரத்தில் இயேசு அவதரிக்கிறார். தூதரின் வார்த்தைகளைக் கேட்ட மரியா, முதலில் இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கலக்கம் கொள்கிறார். எனவே, “இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!” என்று தூதரிடமே மரியா கேட்கிறார். அதற்கு மறுமொழியாக இறைவனின் திட்டத்தை விவரித்த கபிரியேல் தூதர், “கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை” என்று சொல்கிறார். ஆம்! இயலாதவற்றையும் நடத்திவைக்கின்றவர் தான் நம் கடவுள்!

கண்டடைந்துள்ளீர்” என்று வானதூதர் கூறுகிறார். அந்தத் தூதருடைய வார்த்தையைப் பயமின்றி துணிவோடு மரியா ஏற்றுக்கொள்கிறார். ஒரு தாய் தன் குழந்தையைத் தேற்றுவது போல, கடவுளும் வானதூதரின் வழியாக மரியாவை ஆற்றுப்படுத்தி, அவருடைய வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு நிலையிலும் தூய ஆவியார் உடனிருந்து வழிநடத்துவார் என்று உறுதியளிக்கிறார். மனித வரலாற்றிலேயே மிகவும் புனிதமான உயிரை இவ்வுலகிற்குக் கொண்டுவர மரியாவைத் தயார் செய்கிறார். கடவுளின் வார்த்தைமீது மரியா நம்பிக்கை வைத்தார். கடவுளும் இயலாதது என்று கருதப்பட்டதைச் சாத்தியமாக்குகிறார். நாம் கடவுள்மீது வைத்துள்ள நம்பிக்கை எப்படிபட்டது?

இறைவேண்டல்:

எல்லாம் வல்ல இறைவா! எங்கள் வாழ்வில் ஏற்படுகின்ற இடர்பாடுகளைத் தன்னந்தனியாக எதிர்கொள்வதற்கு நீர் எங்களை விட்டுவிடுவதில்ல. எங்கள் உள்ளத்தில் அழுத்தம் தருகின்ற அச்சத்தை அகற்றி, அமைதியை அருள்வீராக.


அன்பின்மடல் முகப்பு