
தொகுத்து வழங்குபவர்:- இரான்சம் அமிர்தமணி
டிசம்பர் 21 : திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - வியாழக்கிழமை
மறைவான உண்மைப்பொருளைக் கண்டுகொள்ளுதல்
வாசகங்கள்:
இனிமைகிகு பாடல் 2:8-14 லூக்கா 1:39-45
அருள்மொழி:
>"ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” (லூக்கா 1:45)
சிந்தனை:
இன்றைய நற்செய்தி வாசகத்தின் மகத்துவமிக்க ஒரு காட்சியைப் புரிந்துகொண்டு, அடையாளம் காணுதல் கடினமானதல்ல. எலிசபெத்தும், மரியாவும் சந்தித்த வேளையில், எலிசபெத் மட்டுமல்ல; அவருடைய உதரத்தில் கருவாகி உருவாகி வந்த குழந்தையுமே அந்தச் சந்திப்பின்போது நடைபெற்ற நிலைபேறான பேருண்மையை அறிந்து ஏற்றுக் கொண்டார்கள். "என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று"" என்று எலிசபெத் சொல்கிறார்.
புனித லூக்கா எழுதுகின்ற கிறிஸ்துப் பிறப்புக்கு முந்தைய நிகழ்ச்சித் தொடரை இந்த் இடத்தில் நிறுத்திவிட்டு, சற்று பின்னோக்கி போவோம். கபிரியேல் வானதூதருக்கு முதலில் மகிழ்ச்சி குறைவுற்ற முறையில் பதிலளித்த மரியா, இப்போது மனதிற்கு உவப்பான நிலையில் செக்காரியாவின் இல்லத்திற்கு வருகிறார். சாதாரணமான மனிதத்தன்மையின் வகையில் இந்த நிகழ்வைப் பார்த்தோமென்றால், இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையில் சில தொடர்புகள் விடுபட்டிருப்பதைப் போன்று நமக்குத் தெரியலாம். அந்த நேரத்தில் தன் பெற்றோரிடம் மரியா என்ன சொல்லியிருப்பார்? கருவுற்ற நிலையில் நசரேத்திலிருந்து யூதேயாவுக்கு அவர் எப்படி, யாருடன் வந்திருப்பார்? வழியில் பாதையும், வானிலையும் எவ்வாறு இருந்திருக்கும்? தனியொருவராகப் பயணம் செய்திருப்பாரா? அச்சமும், குழப்பமும் அவரை ஆட்கொண்டிருக்குமா?
“ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும்” என்று நம்புவது அத்தனை எளிதானதல்ல; அதுவும், அதன் விளைவுகளை நன்கு அறிந்திருந்த ஒரு யூத இளம்பெண்ணுக்கு மிகவும் கடினமான ஒன்றே. மனப்போராட்டங்களைக் கடந்து, கடவுளின் தூதரிடம் சம்மதம் சொன்ன அதே மரியா, தனது கவலைகளையும், அச்சத்தையும் புறந்தள்ளி. தன் உறவினர் எலிசபெத்தை சந்திக்க துணிவோடு வருகிறார். ஆயினும் அன்னை மரியா, இந்த முதல்நிலையிலிருந்து இரண்டாவது நிலைக்குத் தன்னை வெகு எளிதாக அர்ப்பணித்துக் கொள்கிறார். நம்முடைய வாழ்விலும் இதைப் போன்ற சம்பவங்கள் நமக்காகக் காத்திருக்கலாம். மகிழ்ச்சியற்ற மனநிலயின் தெரிவுகளையும், அச்சந்தரக் காத்திருக்கின்ற்ற வாய்ப்புகளையும் தவித்து, அன்னை மரியாவின் ஆன்மீக திருவழியில் நடப்போம்.
இறைவேண்டல்:
கன்னி மரியாவே, ஆசிபெற்ற அன்னையே! வருத்தத்தில் இருக்கின்ற சகோதர-சகோதரிகள் எங்கே இருந்தாலும், நாங்கள் எழுந்துச் சென்று, அவர்களுக்குத் தேவையான நன்மைளைச் செய்யும் துணிவை நாங்கள் பெற்றுக் கொள்வதற்காக எமக்குப் பரிந்து பேசுவீராக. ஆமென்.
அன்பின்மடல் முகப்பு
உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி