திருவருகைக் காலம்- தினசரி சிந்தனைகள்

தொகுத்து வழங்குபவர்
இரான்சம் அமிர்தமணி

16.12.2022 திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் - வெள்ளிக்கிழமை

கடவுள் நமது இதயத்தோடு பேசுகிறார்

அருள்மொழி:

"யோவானிடம் ஆளனுப்பி நீங்கள் கேட்டபோது அவரும் உண்மைக்குச் சான்று பகர்ந்தார்... யோவான் எரிந்து சுடர்விடும் விளக்கு. நீங்கள் சிறிது நேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள். யோவான் பகர்ந்த சான்றைவிட மேலான சான்று எனக்கு உண்டு. நான் செய்து முடிக்குமாறு தந்தை என்னிடம் ஒப்படைத்துள்ள செயல்களே அச்சான்று. நான் செய்துவரும் அச்செயல்களே தந்தை என்னை அனுப்பியுள்ளார் என்பதற்கான சான்றாகும்" (யோவான் 5:33, 35-36).

வார்த்தை வாழ்வாக:

நமது வாழ்விலும் கடவுளுடைய அழைப்பின் பரிமாணத்தை நாம் முதலில் புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். மிகச் சாதாரணமானதாக, தெளிவில்லாத ஒன்றாகக் கடவுளின் அழைப்பு முதலில் இருந்தாலும், போகப் போக ஒரு ஆழமான மாற்றத்தை நாம் உணர முடியும். நாம் எப்போதோ கேட்ட இயேசுவை பற்றிய ஆழமான கருத்துரை அல்லது சாட்சியம் நம்மை இயேசுவிடம் ஈர்த்திருக்கக்கூடும். நாம் சந்திக்கின்ற இது போன்ற சம்பவங்கள், நம் வாழ்வில் திருமுழுக்கு யோவானின் போதனையைப் போலச் செயல்படுகின்றன.

ஆனால், இயேசுவைக் கண்டுணர்ந்து, அவரிடம் நம்பிக்கை வைக்கின்றபோது, நம்மை முழுவதும் அவரே ஆட்கொண்டு, நடத்திச் செல்கிறார். இயேசுவிடம் நாம் சரணாகதி அடையும்போது, இதற்கு முன் நாம் அறிந்திடாதா அளவுக்கு ஆழமான, நிறைவான ஒரு சாட்சிய அனுபவம் நமக்குக் கிடைப்பதை நாம் உணர முடியும். நமது நம்பிக்கை மேலும் வளர வளர, அவருடைய வல்லமையான தெய்வீக பிரசன்னத்தை நாம் உணரும் வண்ணம் இயேசு நேரடியாகவும், ஆற்றலுடனும் நம்மோடு உரையாடத் தொடங்குகிறார்.

சிந்தனை:

நமது நம்பிக்கையின் பயணத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்று சிந்திப்போம். ஒருவேளை, திருமுழுக்கு யோவானைப் போலக் கிறிஸ்துவுக்கு சாட்சியம் பகர்கின்ற வேறொருவரின் வலிமையான தூண்டுதல் நமக்குத் தேவைப்படலாம். மேலும், நமது ஆன்மாவைத் தூய்மையாக்கிச் செம்மைப்படுத்த இயேசு விரும்புகிறார் என்பதையும் இன்று சிந்திப்போம். இயேசுவின் தெய்வீக உடனிருப்பு என்றன்றும் நம்மை வழிநடத்தி, அவருடைய அன்பையும், அக்கறையையும் நாம் உணரச் செய்வதாக.

இறைவேண்டல்:

ஆண்டவரே! என் நம்பிக்கையை ஆழப்படுத்தியருளும். ஒவ்வொரு நாளும் உம்மீது நான் கொண்டுள்ள நம்பிக்கை மேன்மேலும் வளர்வதாக! என்னைச் செம்மைப்படுத்தும் வண்ணம் நீர் என்னோடு உரையாடுவதற்கு எனது உள்ளத்தைத் திறந்தருளும். இயேசுவே, உம்மிடம் நம்பிக்கை வைக்கிறேன்.

அன்பின்மடல் முகப்பு

உங்கள் மேலான கருத்துக்களை ”விருந்தினர் பக்கத்தில்” பதிவு செய்யவும். நன்றி