மழலை இயேசுவுக்கு என்ன கொடுப்பது?

ஹலோ குட்டீஸ்,

கிறிஸ்து இயேசு மழலையாக இம்மண்ணில் பிறந்து தவழ்ந்து வருகின்றார். அவருக்கு என்ன பரிசு கொடுக்க போகிறீர்கள்? குட்டீஸ் உங்களை போன்ற ஆறறிவு ஜீவன்களாக இல்லாத காட்டில் வாழும் - புலி, கரடி, சிங்கம், முயல், காகம், குயில் ஆமை, குரங்கு அகைத்தும் உன்று கூடி ஒரு கூட்டம் போட்டதாம்.

இதற்கு தலைவன் சிங்கம் தலைமை தாங்கியது.
“ஆமா நாமெல்லாம் எதற்காக கூடியுள்ளோம் தெரியுமா சேதி?“ என்றது சிங்கம்.
மற்றவர்கள்:-
“ஆமா ஒன்னும் புரியலே நீங்கதான் தலைவர், நீங்க சொன்னா நாங்களும் கட்டுபடுவோம்.“ என்றதாம் அனைத்து மிருகங்களும்.
சிங்கம்:-
“ஆமா பெத்லகேம் எனும் ஊருல குட்டீ இயேசு பாப்பா பிறந்திருக்காரு நாம எல்லாம் போய் பார்த்திட்டு வரலாமா?“ என்று ஆலோசனை கேட்டது.
மற்றவர்கள்:-
“சரி ராஜா நாம எப்படி எப்போது போகலாம்“ என்று கேட்டன. “என்ன பரிசு கொண்டு போகலாம்“ என்று கேட்டன.
சிங்கம்:-
“பரிசாக உங்க திறமைக்கேற்வாரு பரிசு எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்றாக செல்வோம்.“
மற்றவர்கள்:-
“ஆமா ராஜா நாமெல்லாம் அழகாக நடந்து வேகமாக சென்று விடுவோம்..ஆனா இந்த காகம், குயில், மயில், கிளி யெல்லாம் எப்படி நம்பகூட வருவாங்க?“ என்று கேள்வி கேட்டனர்.
பறவைகள்:-
“ஆ! நாங்களும் இயேசு பாப்பாவை கண்டிப்பாக பார்ப்போம்” என்றன.
சிங்கம்:-
உடனே “நாங்க அழகாக கூட்டமா பரிசுபொருள் வாங்கிட்டு போவோம், நீங்க எங்களோடு நடந்து வர முடியுமா?“ என்று கேட்டது
இதனைக் கேட்ட பறவையினங்கள் “ஆமா இயேசு பாப்பா எங்களையும் கண்டிப்பாக பார்ப்பாரு நாங்களும் வருவோம்“ என்றன.

அன்பர்களே!
விலங்கினங்கள் கிளம்பவிருந்த அன்று மழை, மின்னல், இடியுடன் கொட்டியது மழை. அங்கு எந்த விலங்கினங்களும் செல்ல முடியாத நிலை! எங்கும் வெள்ளம்..
அதே வேளையில் பறவைகள் அனைத்தும் பறந்து சென்று குட்டி இயேசு பாப்பாவை மாட்டுதொழுவத்தில் கண்டு வணங்கி தங்களின் வரவை மழலை இயேசுவிடம் பதிவு செய்தன. அங்கு சூசை மாமுனியும் அன்னை மரியாளும் இவர்களின் வருகையை கண்டு ஆனந்தம், பேரானந்தம் கொண்டனர்.

குட்டீஸ்:-
மழலை இயேசு பாப்பா, இந்த பறவையினங்களை கண்டு புன்னகை பூத்து “வாருங்கள் தோழர்களே! உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள என் இறையரசில் வந்து அமருங்கள்” என்று மழலை இயேசு தன் இருகரம் விரித்து அவர்களை வரவேற்றார். காகம் -குயில் “குட்டி இயேசு பாப்பா நாங்க கருப்பா இருக்கிறோம்னு எங்களை எங்க காட்டு விலங்கினங்க எங்கள எங்க காட்டு விலங்கினங்க சேர்க்க மாட்டேனுட்டாங்க!”

“ஆனா நாங்க எப்படியும் பார்த்திடுவோம் என்ற பேராவல் எங்களுக்கு இருந்தது. குட்டி இயேசு பாப்பா எங்களையும் தானே கடவுள் படைச்சாரு. நாங்களும் உங்க பிள்ளைங்க தானே! அதான் உங்கள பார்த்து நன்றி சொல்ல இந்த காற்று மழையிலும் பறந்து வந்த விட்டோம். 'Happy Birthday to U' குட்டி இயேசு பாப்பா!“ என்று ஆனந்த மழையில் நனைந்தனர். குட்டஸ்.

அந்த சிங்கம் - யானை - கரடி - புலி - குரங்கு - வேட்டைநாய் அனைத்தும் இயேசு பாப்பாவை பார்க்க முடியாமல் மழையில் பயந்து குகையில் பதுங்கி கொண்டன. இயேசு பாப்பாவின் தரிசனம் இவர்களுக்கு கிடைக்க வில்லை. காரணம் இவர்களிடம் “தான்” என்ற அகந்தை குடிக் கொண்டிருந்தது. எனவே தான் மமையுடன் கூடிய மின்னல் வந்து இவர்களை தடுத்துவிட்டது. ஆம் குட்டிஸ் நாம் யாரும் வேற்றுமை பார்க்கக் கூடாது. கடவுளின் படைப்பில் நாம் அனைவரும் சமம்! என்பதை இந்த குட்டி கதை மூலம் அறிந்திருப்பீர்கள்!

குழந்தை இயேசு பாப்பாவுக்கு உங்கள் அன்பு தான் பரிசாக வேண்டும். அனைவரும் கடவுளின் பிள்ளைகள். எனவே உங்கள் இதயமதை புல்லாங்குழல் போல் வெற்றிடமாக இறைமழலை இயேசு பாப்பா வந்து அமரும் ஆலயமாக வைத்து கொள்ள மறைக்கல்வி போதனைகள், உங்கள் வாழ்வாகட்டும்! குழந்தை இயேசுவுக்கு என்ன கொடுப்பது? உன் அருகிலிருக்கும் ஏழை பாப்பாவுக்கு சட்டை வாங்கி கொடுத்தால், அதனை குட்டி இயேசு பாப்பா பார்த்து மகிழ்வார். இது ஒன்றே அவர் விரும்பும் ஆனந்த பரிசு என்பதை உங்கள் பிஞ்சு உள்ளங்களில் பதிவு செய்து 'Happy Christmas' வாழ்த்து கூறி விடை பெறுகின்றேன்.
நன்றி