துயர் மறை பேருண்மைகள் அழைப்பு விடுக்கின்றது.

திருமதி அருள்சீலி அந்தோணி

1. இயேசு நாதர் பூங்காவனத்தில் இரத்தவேர்வை சிந்தியதை தியானிப்போம்.


இயேசு
அன்பனே! எனது துக்கம் நிறைந்த என் அனுபவத்தை உன்னோடு பகிர்ந்துக் கொள்ள ஆசிக்கின்றேன்! என்னோடு சற்று நேரம் அமர்ந்து சிந்திப்பாயா? மகனே! மகளே!
பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்த்தது குறித்து சற்று அசை போடுவாயா? நான் மறுநாள் கள்வர்களின் கையில் ஓப்படைக்க போகிறேன். அதற்கான "தீர்ப்பு" என்றும் மரண சாசனம் வழங்கி விட்டார்கள்! விடிந்தால் சாட்டையடி, கசையடி, முகத்தில் காரி உழிழ்தல் போன்றவை அரங்கேறப் போகின்றது. எனது பாடுகளை நினைத்து எனது உள்ளம் நெருங்கி வேதனையோடு..

அன்பன்
சாமி என்ன நீங்க சொல்லும் போது என் உள்ளம் பதறுகின்றது. என்ன சமி நானும் கொஞ்சம் உங்களோடு பாடுகளில் பங்கேற்க எனது பலவீமான நிலையில் எதாவது செய்ய முடிகிறதா? என்று முயல்கிறேன் சாமி!

இயேசு
அன்றும் என் அன்பு சீடர்கள் பேதுரு, யோவான், யாக்கோபையும் அழைத்து கொண்டு தான் கெத்செமணி தோட்டத்திற்கு வந்து விட்டேன். ஆனால்..

அன்பன்
என்ன ஆனால்..

இயேசு
எனது பாடுகளை நினைத்தேன்! என் வியர்வை செந்நீராக பெருக்கெடுத்து வடிகின்றது. எனது உதடுகள் வறட்சியால் காய்ந்து போகின்றது. உடல் பயத்தினால் நடுங்குகின்றது. திரும்பி பார்க்கின்றேன். என் சீடர்கள் உறங்கிவிட்டார்கள். என்ன செய்வது மீண்டும் புலம்புகிறேன். "என்னோடு சில மணிதுளிகள் விழித்திருந்து செபிக்க மாட்டீரா?" என்று உங்களையும் தான் பார்த்து கேட்கிறேன்.

அன்பன்
சாமி இன்று புனித வியாழன் உமது கெத்செமணி வேதனைகள் எங்கள் கண் முன்னே நிற்கிறது. அதனால் உமது பேழையின் அடியில் அமர்ந்து செபித்து உமக்கு ஆறுதல் அளிக்க வந்துள்ளோம்! சாமி

இயேசு
மகனே, மகளே உமது வருகை எனக்கு பேராறுதலை தருகின்றது. உமது செபம் என் செந்நீர் வியர்வைக்கு அருமருந்தாகின்றரத நான் உணர்கின்றேன்! என் வேதனையை நீர் இன்று உணர்ந்ததுபோல உன் அருகிலிருப்பவரின் துயரையும் ஏழைஎளியோரின் வாழ்வுக்கு என் உதவி அருளப்படும்போது எனது வேதனைகள் சுகமாகிடும் என்பதை நீ அறிந்திடு நண்பா!

அன்பன்
சாமி பூங்காவனத்தில் நீவிர் பட்ட துன்பங்கள் நாங்கள் செய்கின்ற தவறுகளின் பிரதி பலன் தான் என்பதை உணர்ந்து விட்டோம் சாமி!

2. இயேசுநாதர் கற்தூணில் கட்டுண்டு அடிப்பட்டதை நிறைவு கூர்வாயா அன்பனே!


இயேசு
மகனே, மகளே நான் உயரமான மனிதன் என்னை குட்டையான கற்தூணில் குறுக்கி மடித்து என்னை இறுகக் கட்டுகிறார்கள். அப்போது எனது வளர்ந்த எலும்புளெல்லாம் சிறிதுசிறிதாக உடைய வலி தாங்காமல் குமுறுகின்றேன். என்ன செய்வது! என் வேதனை யார் அறிவார்? கதறுகின்றேன். சாட்டையால் அடிக்கின்றார்கள். குருதி என் தோளைக் கிழித்துக் கொண்டு எழுகின்றது. வலி தாங்க முடியவில்லை!

அன்பன்
சாமி எங்களால் பொறுக்க முடியல. சாமி நீங்க மானிடருக்காக பட்ட துயரங்களை இப்ப உம்மோடு இந்த நாட்களில் தான் உணர்கின்றோம். எங்களை மன்னித்தருளும். எம் துயரம் மிகுந்த இயேசுவே பாவி எம்மை மன்னியும்!

இயேசு
நண்பா! என் முகத்தில் காரி உமிழ்கிறார்கள். ஒன்றா - இரண்டா எத்தனை பேர் இங்கே கூடி நின்றார்களளோ அத்தனைபேரும், எத்தகைய உடல் வலிமையிலிருந்தானோ அத்னை வேகமாக நீர் இயேசுவா? நீர் தான் மெசியாவா? என்று சொல்லி என் முகத்தில் துப்பினார்கள்! நான் சொல்லொண்ணா வேதனையோடு மானிடருக்காக தந்தையின் அன்புக் கட்டளைக்காக ஏற்றுக் கொண்டேன்! என் பார்வையும் அந்த எச்சிலால் மறைந்து போனது தோழா! நான் சொல்வதை நீ செய்வாயா?

அன்பன்
சாமி சொல்லுங்க..

இயேசு
உன் அருகிலிருப்போருக்கு நீ போய் உதவி செய். அந்த ஏழையின் முகத்தில் நீ என்னை காண்பாய்..

3.இயேசுவின் தலையில் முள்முடி சூட்டியது.. குறித்து தியானிப்போம்!


இயேசு
"யூதர்களின் அரசனா? நீ இந்தா உனக்கு அரசமுடி காட்டு முட்கள்." ஒவ்வொரு முள்ளும் 3 அங்குலம். அதனை கீரிடமாக பல முட்களால் சூட்டி எனது தலையில் வைத்து பெரிய சுத்தியால் கொண்டு கள்வர்கள் ஓங்கி அடித்து நரம்புகளும் புடைத்து நிற்க இரத்தமும் சதையும் சிதறி என் கண் வழியாய் விழுவதை நான் உணர்கின்றேன். கண்களும், செவிகளும் குருதியால் பஞ்சடைக்க அந்த கற்தூணில் சாய்ந்து விடுகிறேன் ஆனால்..

அன்பன்
என்ன சாமி..

இயேசு
என்னை அடித்து புரட்டி எடுத்து மீண்டும் கற்தூண் பிணைத்து அடிக்கிறார்கள். எனை மறந்து கிடக்கிறேன். இந்த கற்தூணில் என் துயரம் நிறைந்த பாடுகள் உன் போன்ற மானிடருக்காக தான் என்பதை உன் இதயமதில் பதிவு செய் அன்பனே!

4. இயேசுநாதர் பாரமான சிலுவைவை சுமந்து கல்வாரிக்கு செல்வதை தியானிப்போம்.


இயேசு
கல்வாரி பயணம்! சிலுவையோடு தோள்புண்களால் துவண்டு இரவொல்லாம் மாளா துயரால் கதறி கலங்கி பகலொல்லாம் சாட்டையடி - முள்முடி. கண்கள் பஞ்சடைந்து நடக்கக் கூட நாதியில்லாமல் துவண்டுபோன வேளையில் என் தோள் மீது பாரச்சிலுவை தூக்கிக் கொண்டு நடக்கிறேன். அன்று கள்வனுக்கு இந்த சிலுவைபயணம். ஆனால் இன்று நீதியை - நேர்மையை சுட்டிக்காட்டிய எனக்கு இந்த பாரமான சிலுவை என்ன செய்வேன் மகளே! மகனே!

அன்பன்
சாமி உங்க துன்பம் முன் நாங்கள் ஒன்றுமில்லை சாமி. ஆனானப்பட்ட கடவுளுக்கே இந்த கதி என்றால் நாங்க எம்மாத்திரம் சாமி. இந்த உலகம் பரந்தது என்று கேள்விபட்டேன். ஆனால் இத்தகைய கொடுமைகள் இருப்பதை உமது பாடுகளின் பயணத்தில் அறிந்துக்கொண்டேன். உமது பாடுகள் எம்மை மாளாதுயர் நிலைக்கு கொண்டு வந்துள்ளது சாமி.

இயேசு
நான் படும் துன்பம் அனைத்தும் உம் போன்ற மானிடர் நல்வாழ்வு வாழவே என்பதே மறக்காதே! என் போதனைகள் உன் வாழ்வின் மைல்கல் ஆகட்டும்.

அன்பன்
சாமி நீங்க பதினான்கு நிலைகளை கடக்க வேண்டுமே! எப்படி சாமி

இயேசு
மகனே! மகளே! 14 தடயங்கள் மனிதனின் வாழ்விலும் மலரும் தடயங்கள் தான் என்பதை மறந்துவிடாதே! காரணம் அநீதியை தட்டி கேட்டதினால் தான் இந்த பரிசு எனக்கு என்பதை மறவாதே! அதற்காக உன் பார்வையில் நடக்கும் அநீதியைகளை தட்டிக் கேள்! நீதியை நிலை நாட்டு! உன் ஆண்டவர் உன் அருகிலிருக்கிறார் என்பதை மறவாதே!

அன்பன்
சாமி இந்த பாரமான சிலுவை எங்கள் வாழ்வின் விடியலாகிட நான் என்ன செய்ய வேண்டும்.

இயேசு
மகனே! மகளே! எனக்கு சுமத்தப்பட்ட சிலுவைமரம் ஒரு கழுமரம்! நீ பார்க்கின்ற அழகான சிலுவையல்ல! அன்று ஆதி பெற்றோர் விலக்கப்பட்ட கனி சாப்பிட்டு பாவத்தை ஏற்றார்களே! அந்த விலக்கப்பட்ட மரத்தின் சிலுவை தான் இது.

அன்பன்
அதெப்படி சாமி..

இயேசு
அந்த மரம் விழுந்து காலம் கடந்து சாலமோன் மன்னன் எருசலேம் தேவாலயம் கட்டிய, பிறகு மரத்துண்டுகள் செதுக்கப்பட்டு ஆலயத்திற்கு தேவையான கதவுகள் - சன்னல்கள் -தூண்கள் செய்யப்பட்டு கழித்து விடப்பட்ட அந்த கிளை தான் இந்த பாரமான சிலுவை கழுமரம்! இந்த கழுமரத்தினால் தான் கரடுமுரடான சிலுவைச் செய்து எனது தோளில் சுமத்தினார்கள். அதனால் தான் சிலுவை என் தோள்களை பதம் பார்த்தது. இந்த வேதனை தாளாமல் தான் மூன்று முறை நிலை தளர்ந்து விழுந்தேன்.
நான்காம் தடத்தில்
என் அன்னையின் சந்திப்பு எனக்கு உத்வேகத்தை தந்தது. தளர்ந்து போகாதே மகனே! என் தேற்றுதல் உன்னோடு என்று இரு கண்களின் சங்கமம் எனக்கு உற்சாகத்தை கொடுத்தது.
ஐந்தாம் தடம்
நான் நடுவழியில் இறந்து விடுவேனோ? என்ற பயம் அவர்களுக்கு, அதனால் தான் சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் எனக்கு உதவ முன் வருகிறார். அவர் உங்கள் வாழ்வில் எப்படி அடுத்தவரின் துயரில் உதவ வேண்டும் என்பதற்கு சான்றாக அமைகிறார்.
ஆறாம் தடத்தில்
வெரோணிக்கா ஒரு வீரபெண்மணி. காரணம் அன்றைய யூத வர்க்கம் பெண்களை அடிமைபடுத்திய சூழலில் வீறுக் கொண்டெழுந்தாள். என் முகத்தை அந்த வீரபெண்மணியின் சிறு துணியில் பதிவு செய்தேன். இன்றும் அன்றும் எனது குருதி படிந்த உருவம் மானிடரின் உள்ளத்தின் அளவு கோல். எட்டாம் தடத்தில் மாசற்றவருக்கு மரணதண்டனையா? மணிமுடியை தாங்கியவர்க்கு முள்முடியா? என்ன செய்வதறியாது? எருசலேம் மகளிர்கள் கலங்கி நிற்கின்றனர். எனக்காக அழவேண்டாம். உம் பிள்ளைகளுக்காக அழுங்கள் என்கின்றேன். காரணம் பின்ளைகள் இறைவனின் விருட்சமாக வளர வேண்டும்! உலகமாயைகள் அவர்களை சிதறடிக்கும் என்பதை வலியுறுத்தவே அன்றும் இன்றும் உம்மிடையே பதிவுச் செய்கிறேன். "நீதிபால் பசி தாகம் உள்ளோர் பேறுபெற்றோர்."

5.இயேசு சிலுவையில் அறையுண்டதும் மரித்ததும் குறித்து தியானிப்போம்.


இயேசு
எனது ஆடைகளை இரத்தம் தோய்ந்த உடலிருந்து உரித்து எடுக்கிறார்கள். உன் உடல் நெருங்கி ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. வேதனையின் ஒருபுறம் கழுமரத்தில் உன் கால்களையும் - கைகளையும் ஆணிகளை வைத்து ஓங்கி சுத்தியால் அறைகிறார்கள். நான் பதறி கதறி நிலை தளர்ந்து விட்டேன். மகனே! மகளே! என் துயர் துடைப்பாயா? பிறர் துயரை துடைக்கும்போது நீ அயலானில் என்னைபார்.

அன்பன்
சாமி எனக்கு மயக்கம் வருகின்றது. எப்படி சாமி இந்த வேதனை?

இயேசு
மகனே! மகளே நான் சிலுவையில் விண்ணுக்கும் மண்ணுக்குமிடையே தொங்குகின்றேன். மூன்று ஆணிகள் தான் எனக்கும் சிலுவைக்கும் இடையே உள்ள உருக்கமான உறவை சொல்லும் நிலை.

அன்பனே
எனது இறுதி வார்த்தைகள் சற்று கவனிப்பாயா?
நண்பா! நான் பட்ட துன்பங்களை என் தந்தையிடம் நான் ...
1. "தந்தையே இவர்களை மன்னியும்! ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறார்கள் "(லூக்கா 23:34) என்கிறேன்.
2. நல்ல கள்வனை பார்த்து "நீ இன்றே என்னோடு பேரின்ப வான் வீட்டில் இருப்பாய்" என்று உறுதிபட உரைக்கின்றேன்.(லூக்கா 23:43)
3. சிலுவையில் என் அன்பு தாயை நோக்கி "அம்மா இவரே உம் மகன்" என்அன்பு சீடரிடம் "இதோ உன்தாய்" என்று இந்த உலகமாந்தர் அனைவருக்கும் தாயாக என் தாயை உமக்காக விடடுச் சென்றேன். (யோவான் 19:23)
4. "ஏலி, ஏலி லெமா சபக்தானி?" அதாவது "என் இறைவா ஏன் என்னை கை விட்டடீர்" (மத்தேயு 27:46) என்று உரத்த குரலில் கதறுகின்றேன்.
5. "நான் தாகமாய் இருக்கிறேன்" யோவான் 19:28) எல்லாம் நிறைவேறியதை உணர்ந்த நான் தாகத்தை விட்டுச் சென்றேன்! என்ன தாகம் தெரியுமா? ஏற்ற தாழ்வுயில்லா சமத்துவ தாகம்! என் தாகம் மலைப்பொழிவில் அடங்கியிருக்கின்றது. படித்து அதன்படி வாழவே இன்றைய தவக்காலச் சிந்தனை என்பதை மறவதே மகனே!மகளே!
6. "எல்லாம் நிறைவேறிற்று." (யோவான் 19:30) என்கின்றேன். ஆனால் அவர்களோ என் தாகத்திற்கு கசப்பான காடியை கொடுத்து என் தாகத்தை தணிக்க பார்த்தார்கள். என் தாகம் அவர்களுக்கு புரிந்திருந்தால் ஏன் இந்த சிலுவைப்பாடுகள், என்பதை அவர்கள் உணரமாட்டார்கள்.


இயேசு
அன்பனே பாலைநிலத்தில் மோசேவால் பாம்பு உயர்த்தபட்டது போல மானிடமகனும் உயர்த்தப்படவேண்டும் என்பதே தந்தையின் திருவுளம்! அப்போது தன் மானிடரை என்பால் ஈர்த்துக் கொள்வேன் என்பதே இறைத்திட்டம்!
"தந்தையே உம் கையில் என் ஆவியை ஒப்படைக்கின்றேன்!" (லூக்கா 23:46) என்று என் தந்தையை நோக்கி கூவி என் உயிரை விடுகின்றேன்!
அன்பனே எனது துக்கம் மிகுந்த இந்த துயர் மறை பேருண்மைகளை என்னோடு பகிர்ந்து கொண்ட உனக்கு இன்றே என்னோடு பேரின்ப வீட்டில் இடம் பதிவுச் செய்கின்றேன்.! வாழ்கின்ற காலங்கள் என் மீட்பு திட்டத்தின் விடியலாகிட வரம் தருகின்றேன்!

அன்பன்
சாமி நான் மாறுவேன். எனக்கடுத்திருப்பவரையும் இணைத்து வருகின்றேன். நன்றி இயேசுவே! மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்