இறைவனையும் மனிதனையும் இணைக்கும் உறவு பாலம்

திருமதி அருள்சீலி அந்தோனி
prayer

தந்தையாம் இறைவனின் திருவுளத்தின் உச்சக்கட்டமே மரியின் வழியாகத் தன் ஓரே மகனின் மண்ணுலக உதயம். அன்னையின் அருந்தவத்தினால் இயேசு 12 ஆண்டுகள் பெற்றோரின் உடனிருப்பில் வளர்ந்தார். 12 வயது முதல் 30 வயது வரை சமுதாயப் பகுப்பாய்வு அவரது பார்வையில் பதிந்தது. 18 ஆண்டுகளின் ஆய்வின் உச்சக்கட்டமே யோர்தான் திருமுழுக்கு - 40 நாட்கள் பாலைவனத்தில் நோன்பு - திருத்தூதர்கள் கலிலேயாக் கடற்கரையில் மீன்பிடி சீடர்கள், போதனைகள்-பிணித் தீர்த்தல்-பாடுகள்-இறப்பு-உயிர்ப்பு. இவை இறைவன் மனிதனாகி மானிடருக்காகப் பட்ட துன்ப துயரங்கள். இவற்றைத் தவக்காலம் நம்மை அசைப் போட்டு பார்க்க தான் பொன்னாக ஆறு வாரங்கள் என்பதைப் பதிவு செய்வோம்.

இறைவனின் பாடுகளை மட்டும் உணர்வதோடல்லாமல் நமது வாழ்வில் தோன்றும் போராட்டங்கள், சவால்கள், தடுமாற்றங்கள், துன்பங்கள் வழியாகவும் இறைவன் நம்மை அன்பில் வளரவும் மலரவும் அழைப்பு விடுக்கின்றார்.

கடவுளே ஏன் எனக்கு மட்டும் இத்துன்பம்? எனது வேதனைக்குரல் உனக்குக் கேட்கவில்லையா? எனது விண்ணப்பத்தை மட்டும் ஏன் இறைவன் கேட்க மறுக்கிறார்? என்ற பல புண்பட்ட இதயங்களின் புலம்பலை கேட்கத் தான் செய்கிறோம். அதிலும் குறிப்பாக இறைபக்தியிலும், இறைஉறவிலும் அதிக ஈடுபாடு உள்ளவர்களோடு இறைவன் அதிகமாகப் போராடுகின்றார்? உதாரணம் பழையஏற்பாட்டு நீதிமான் யோபு!

இறைவா நீர் எதை வேண்டுமானாலும் கொடுங்கள். இந்த வேதனை மட்டும் வேண்டாம் என்று பல முறை வேண்டுகிறோம். ஆனால் எது நடைப்பெறக் கூடாது என்று நினைத்தோமோ அது நடக்கும்.

இறை-மனித- உறவில் போராட்டம் என்பது நம்மைப் பலவீனப் படுத்த அல்ல. மாறாக நம்மை நாமே திடப்படுத்தி இறை ஆற்றல் பெறுவோம். இறைவன் எங்கே? எப்படி? நம்மோடு உறவுப் பாலம் அமைக்கிறார் என்பதை உணர்ந்து விழிப்போடு இறைவனில் இயங்குவோம்.

தவக்காலச் சிந்தனைகளை ஏற்போம். தான-தர்மங்களை வலதுகரம் செய்வதை இடதுகரம் அறியாவண்ணம் செய்வோம். தவம்-செபம்- தர்மம் மூன்றும் இறைவனையும் மனிதனையும் இணைக்கும் உறவு பாலமாகும்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்