தவக்காலத்தின் மாண்பு

திருமதி. ரெஜினா சின்னப்பன் - சென்னை
lent

தவக்காலம் இது தவக்காலம்
தவறுகளை உணர்ந்து வருந்தும் காலம்
இறைமகன் சுதனின் பாடுகளை
தவறாது சிந்தித்து மனம் திருந்தும் காலம்

பாவங்கள் செய்த காலங்களை
பக்திப் பற்றுடன் நினைக்கும் காலம்
பாவமன்னிப்புப் பெற தேவனிடம்
பாவசங்கீர்த்தனம் செய்யும் காலம்

இறைஇரக்கத்தால் கருணை பெறும் காலம்
இயேசுவின் சிலுவையை இதயத்தில் சுமந்து
இறையன்பில் இணையும் காலம்
இறை உறவில் வளர்ந்திட ஆசீர்பெறும் காலம்

அகத்தின் இருளை போக்கி
அருளை அடையும் காலம்
அண்ணல் இயேசுவின் அன்பால்
அமைதியாக வாழும் காலம்


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்