தொடரும் உறவுகள்

திருமதி அருள்சீலி அந்தோனி
on the cross.....

மானிடா - ஒரு நிமிடம்......
நாம் கருவறையில் இருந்த நாள் முதல் எத்தனையோ உறவுகள் வந்து போனாலும் காலச் சூழலினால் உறவுகள் தடம்புரண்டாலும் மாறாத உறவாக நிலைத்திருப்பது இறை - மனித உறவு மட்டும் தான். நண்பா......

கருவறையில்:- தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்: நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன் -ஏரேமியா 1-5

குழந்தைப் பருவத்தில்:- சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்; அவர்களைத் தடுக்காதீர்கள். மத்தேயு 19:14

பெற்றோகளால் புறந்தள்ளப்பட்டநிலையில்:- பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். எசாயா 49:15

தனிமையில் உனக்காக தோல்வியில்:- உன்னை நான் ஒருபோதும் மறவேன். உன்னில் நான் இருக்கிறேன். உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன். ஏரேமியா 1:19

கவலையில்:- உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டு விடுங்கள். 1பேதுரு 5:7

துன்பத்தில்:- உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு: கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். பாருக் 5:1

சோதனையில்:- உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார். 1கொரிந்தியர் 16:13

சோர்வில்:- பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். மத்தேயு 11:28

பகைவரின் இடையூரில்:- தீயவன் உன் நடுவில் இனி வரவே மாட்டான்; அவன் முற்றிலும் அழிந்து விட்டான்.நாகூம் 1:15

கண்ணீரில்:- நீ அழுகையை நிறுத்து: கண்ணீர் வடிக்காதே: ஏனெனில் உனது உழைப்புக்குப் பயன் கிடைக்கும். ஏரேமியா 31:16

நோயில்:- நான் உனக்கு நலம் அளிப்பேன்: உன்னுடைய காயங்களை ஆற்றுவேன். ஏரேமியா 30:17

பலவீனத்தில்:- வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்” 2 கொரிந்தியர் 12:9

அச்சத்தில்:- அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்: கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்: உதவி செய்வேன்: என் நீதியின் வலக்கரத்தால் உன்னைத் தாங்குவேன். எசாயா:41:10

பாவநிலையில்:- உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன். எசாயா 44:22

வாழ்விழந்த நிலையில்:- அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்: விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்: உன் நேர்மை உனக்கு முன் செல்லும்: ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். எசாயா 58:8

அன்பிழந்த நிலையில்:- ' உங்களுக்கு அமைதி உரித்தாகுக! ' லூக்கா 24:36

தீமையில்:- தீமையில் தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன். எரேமியா 15:21

அமைதியில்:- உம் அமைதியின் பொருட்டு நீர் அன்பு பாராட்டப்பட்டீர். சீராக் 47:16

மகிழ்ச்சியில்:- உன் கடவுள் உன்னில் மகிழ்வார். எசாயா 62:5

நம்பிக்கையில்:- நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும். மத்தேயு 9:29.

அன்புள்ளங்களே!
நமது இன்பத்திலும் துன்பத்திலும் உடனிருந்து, நம்மைத் திடப்படுத்தி வலுவுட்டும் இறைவனிடம் நாம் ”இதோ ஆண்டவரின் அடிமை. உமது வார்த்தையின்படி எனக்கு நிகழட்டும்” என்ற மரியாவைப் போலக் கூறி, நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது என்று அவர் கரங்களில் நம் வாழ்வை ஒப்படைத்தால், இன்று முதல் புதியவற்றையும் நீ அறியாதவற்றையும், நீ அறியாத மறைப்பொருளையும் உனக்கு வெளிப்படுத்துவேன். (எசாயா 48:6) உன்னை நான் பெரிய இனமாக்குவேன். உனக்கு ஆசி வழங்குவேன்! நீ ஆசியாய் விளங்குவாய்! (தொநூ 58:8)

உன் ஒளி விடியல் போல் எழும். விரைவில் உனக்கு நலமான வாழ்வுத் துளிர்க்கும். உன் மேல் இன்று நான் விண்ணையும், மண்ணையும் சான்றாக அழைத்து வாழ்வையும், சாவையும், ஆசியையும், சாபத்தையும், உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித் தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தேர்ந்துக் கொள் (இச 30:19) என்று கூறி நலமான, வளமான வாழ்வைக் கொடுப்பார். எனவே நாம் அவரில் சரணடைந்து அன்பு கொண்டு நமது அறச்செயல்களை அனைத்தும் அவரில் சமர்ப்பித்து நிலைவாழ்வைப் பெறுவோம். என்றென்றும் நம்மோடு உறவு கொண்டு நிலைவாழ்வை அளிக்கும் இறைவனிடன் சரணாகதி அடைந்து இன்புறுவோம்.

இறை-மனித-உறவில் சஞ்கமித்து வாழ்வோம்.


 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்