ஒளியும் இருளும்

அ.அல்போன்ஸ்-திருச்சி

நற்செய்தியின் நிகழ்வுகள் நன்மைக்கும் தீமைக்கும் அறத்திற்கும் மெய்மைக்கும் பொய்மைக்கும் இடையயே நிகழும் போராட்டங்களும் இறுதியில் தீமை விழ்ச்சியுற்று நன்மை வாழ்வுபெறுவதையுமே எல்லா வேதங்களும் காப்பியங்களும் வெவ்வேறு வகையாக உணர்த்தி நிறைகின்றன.
இங்கே நன்மைக்கும் தீமைக்கும் இருக்கும் ஒளிக்குமான போராட்டத்தைப் பார்ப்போம். யூதாஸ், இவன் பட்டுபோன அத்திமரம்
நற்செய்தியாளர்கள் நால்வருமே இவனை அறிமுகப்படுத்தும் விதம் அபாரமானது.
The Kissமத்தேயு, லூக்காஸ், மாற்கு மூன்று பேரும் பன்னிரு சீடர்களின் பெயரைக்கூறும் பொழுது ஒவ்வொரு பெயரையும் கூறுகின்றார். "பேதுரு என்னும் சீமோன் அவரது சகோதரர் பெலவேந்தரர், செபதேயுவின் மகன் யாக்கோபு அவர் சகோதரர் யோவான், பிலிப்பு அல்பேயுவின் மகன் யாக்கோபு" என்று கூறிக்கொண்டே வரும் பொழுது யூதாஸை பற்றி கூறிவருகையில் ‘காட்டிக்கொடுத்த யூதாஸ் இஸ்காரியோத்து என்று கடைசியாக சொல்லி முடிக்கின்றார்கள் (மத் 10:5 மாற் 3-19 லூக் 6:16)
அவரை சொல்வதென்றால் யோவான் கூறியது போல் சீமோன் இஸ்காரியோத்தின் மகன் யூதாஸ் (யோவான் 13:26) என்று கூறியிருக்க வேண்டும் ஆனல் காட்டிக்கொடுத்த யூதாஸ் என்கின்றார்கள். இயேசு இன்னும் மீட்புப் பணியை தொடங்கவே இல்லை ஜெத்சமனி தோட்டத்தில் கடும் தவம் புரிந்து இரவில் தந்தையிடம் மன்றாடியபிறகு யூதவீரர்களுடன் வந்து யூதாஸ் காட்டி கொடுப்பதை மூன்று ஆண்டுகள் கழித்து நடக்க இருப்பதை இப்பொழுதே அறிமுக நிலையிலேயே அவனை காட்டிக்கொடுத்த யூதாஸ் எனறு அழைக்கப்படுவதை காண்கிறோம்
யோவான் யூதாஸ் பாஸ்காவுக்கு ஆறு நாட்கள் இருக்கும்போது அவனை அறிமுகப்படுத்துகிறார். எப்படி பெண்ணொருத்தி இயேசுவின் பாதங்களில் தைலம் பூசும் பொழுது அந்த தைலத்தை விற்று ஏழைகளுக்கு உதவலாமே என்று கூறும் பொழுதுதான் யூதாஸைப் பார்க்கின்றோம். யூதாஸுக்கு ஏழைகளின் மீது உள்ள கருணையால் என்று எங்கே நினைத்துவிடுவேமோ என்று விவரமாகவே பதிவு செய்கிறார். காட்டி கொடுக்க இருந்தவனும் அவருடைய சீடர்களின் ஒருவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து கூறினான் அவன் கூறியது திருடனாயிருந்ததால் தான் என்று இயேசுவின் சீடரைப்பற்றி தெளிவுபடக் கூறுகின்றார். மூன்று வருடம் ஓடிவிட்டது ---
யூதாஸை மீண்டும் இயேசுவுடன் பாஸ்கா இரவு உணவு உண்ணும் பொழுது பார்க்கின்றோம்
இயேசுவே யூதாஸைப் பற்றி ‘என்னை காட்டி கொடுப்பவன் என்னேடு உண்ணுகிறான்’ என்று நற்செய்திகள் நான்கும் ஒரே குரலில் கூறுகின்றன (மத் 26:20, லூக்22:14, மாற்கு 14:17, யோவான் 13:20).
முதலில் பார்த்தோம் பன்னிரு சீடர்களைபற்றி கூறுகையில் “காட்டிக்கொடுத்த யூதாஸ்” என்று கூறிய மூன்று நற்செய்தியாளர்களும் இயேசு பிடிபடும் பொழுது யூதாஸை கூறுகையில் (மத் 26:247 லூக்21:47, மாற்கு 14:23, யோவான் 13:20)
காட்டி கொடுத்த சமயத்தில் பன்னிரு சீடர்களின் ஒருவன் என்று கூறுவதை படிக்கின்றோம்
ஏன் பன்னிருவருள் ஒருவன் என்ற அடைமொழியை தருகின்றார்கள்
பேதுரு மறுதலிக்கும் பொழுது பன்னிருவருள் ஒருவன் என்று கூறவில்லை என்பதும் கவனிக்கதக்கது பன்னிருவருள் ஒருவன் என்று கூற காரணம் யூதாஸ் முன்று வருடங்களாக இயேசுவுடன் உண்டு உறங்கி அவரின் உபதேச மொழிகள் உவமை கதைகள் புதுமைகள் எல்லாம் கூடவே இருந்து பார்த்து ஏன் இயேசுவின் பொருளாளராக இருந்து கவனித்துக் கொண்டவன். இயேசுவின் சீடர்களின் ஒருவனாக இருந்தான் அவருக்கு எதிராக மாறுகிறான் அதனால் தான் என்னவோ பன்னிருவருள் ஒருவன் என்ற அடை மொழியாலேயே நற்செய்தியாளர்கள் இயேசுவை காட்டி கொடுக்கும் சமயத்தில் கூறுகின்றார்கள்.
யூதசங்கத்தில் தான் கல்வாரி கரு பெற்றது பின்னர் அதற்கு கையும் காலும் முளைத்து உருவம் பெற்று இதோ இப்பொழுது பேறுகால தேதி குறித்து யூதாஸின் தலைமையில் தோட்டத்திற்கு வருகின்றது
இயேசுவை சிலுவையில் உயிர் விடுவதற்கு முன்னமே யுதாஸின் முத்தம் அவனை கொன்று விடுகிறது. அன்பு கருணை கொண்ட இயேசுவோடு வாழ்ந்தது உண்மைதான். ஆனால் யூதவீரர்களுடன் இயேசுவுக்கு முடிவைகட்ட வந்த பொழுது தன் முடிவையும் தானே எழுதிக் கொண்டான்.
விசுவாசத்தின் இலட்சியம் முறிந்த இடம் இது.
அவன் தந்த முத்தம்தான் இயேசுவை கொன்ற முதல் ஈட்டி.
யூதாஸ் இயேசுவை காட்டி கொடுக்க முத்தத்தை தேர்தெடுத்தான்.
father's kissமுத்தம் அன்பின் வெளிப்படாகும் ஊதாரிமகன் திரும்பிவந்தபொழுது ஓடிப்போய் அவனது தந்தை கடடியணைத்து முத்தமிட்டார் (லூக் 15:20)
அப்படிபட்ட அன்பின் வெளிப்படான முத்தத்தை ஏன் அடையாளமாக யூதாஸ் தேர்தெடுத்தான். “எவரை நான் முத்தமிடுகிறேனோ அவர் தான் அவரைப்பிடித்து கொள்ளுங்கள்” அவர்களுக்கு அடையாளமாக சொல்லியிருகின்றான். (மத் 26:48, மாற் 14:43) அருகில் நின்று அல்லது கையுடன் கை குலுக்கி போன்ற ஏதாவது ஒரு நிகழ்வை அடையாளம் என்று எடுக்காமல் முத்தத்தை ஏன் தேர்தெடுத்தான்?
நற்செய்திகளில் பல இடங்களில் முத்தம் அன்பின் சின்னமாக காண்கிறோம்.
லாபான் யாக்கோப்பை கட்டிக் கொண்டு முத்தம் செய்தது,
யாக்கோபு ராகோலை முத்தம் செய்தது, (ஆதி 29:11)
யாக்கோபு தன் சகோதரர் எசாவை முத்தம் செய்தது(ஆதி 3.3:4)
தாவீது யோனத்தானும் முத்தமிடுவதை சாமுவேல் ஆகமம் கூறுகிறது(சாமு 20:41)
யோவாப் அமாசா என்பவனை பார்த்து அவனை முத்தஞ்செய்யும் படி சென்று தன் வலது கையில் உள்ள வாளால் வயிற்றிலே குத்த அமாசா இறந்துபோனன் என்பதை சாமுவேல் ஆகமம் கூறுகிறது.
இந்த சம்பவம் சொல்லும் செய்தி என்ன?
நண்பன் என்ற முறையில் முத்தம் செய்கின்றான் - சாகடித்துவிட்டான் அன்பை பரிமாறும் முத்தம் கொல்லவும் தயங்காது போலும்
யூதாஸ் இதை தான் செய்தான் அவன் வாய் முத்தம் தந்தது. ஆனால் அது இயேசுவின் உள்ளத்தில் வாளாக ஊடுருவியது.
தெளிவாக கூறுவான் நான் முத்தமிடுபவனை “அவரை பிடித்து காவலோடு கொண்டுபோங்கள். இயேசுவை இங்கு தான் சீடர்கள் கைவிடுகிறார்கள் (மாற் 14:44)
யூதசங்கத்தார் முகத்தில் துப்புகிறார்கள் அடிக்கிறார்கள் - யார் அடித்தது? என்று தீர்க்கதரிசனம் கேட்கிறார்கள் ……….. பேதுரு மறுதலித்தார் …….மக்கள் சிலுவையில் அறையும் என்றனர், ………….தந்தையும் கைவிட்டார், இருள் சூழ்ந்தது ………இயேசுவும் கதறினார் - உயிரை விட்டார்
யூதாஸ் தந்த முத்தம் இந்த சம்பவங்களுக்கு தொடக்கம்
நெஞ்சை உருக்கும் இரத்தகறை படிந்த பக்கங்கள்
இயேசுவை முத்தம் செய்தபொழுது -அவர்கூறிய வார்த்தை
‘நண்பனே’- எத்துணை பாசமான வார்த்தை இயேசு மனிதநேயத்தை காட்டும் இடம் இது. - நீங்கள் என் நண்பர்கள் ஊழியர் என்று சொல்லேன் என்று சீடர்களுக்கு கூறுகின்றார் (யோவான் 15:14) அதன் படி முதன்முதலில் நண்பா என்று தன்னை காட்டி கொடுக்கும் சமயத்தில் கூறுவது. சொல்லும் செயலும் ஒன்றிவாழ்பவர் இயேசு. இந்த முத்தசத்தம் மூன்று நற்செய்திகளிலும் எதிரொலித்தது.
ஆனால் நான்காவது யோவான் மட்டும் யூதாஸ் முத்தம் தந்தான் என்று கூறவே இல்லை. காட்டி கொடுத்த யூதாஸ் அவர்களுடன் இருந்தான் (யோவான் 18:6) என்று கூறுகின்றார். யோவான் முத்தமிட்ட நிகழ்வை கூறவில்லை - ஏன்?
இயேசுவை ஒவ்வொரு நற்செய்திகளிலும் ஒவ்வொரு விதமாக கூறுகின்றார்கள் மத்தேயு அரசராக, - மாற்கு ஊழியராக - லூக்காஸ் மனிதனாக யோவான் கடவுளாக காண்கின்றார்கள்
சாத்தான் புகுந்த யூதாஸ்(லுக்22:13) கடவுளுக்கு முத்தமிடமுடியுமா? அதனால் தான் யோவான் முத்தமிட்ட நிகழ்வை கூறவில்லை.
நாம் அன்பால் முத்தமிடுவோம்.

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்