காத்திருந்தது கல்வாரி

அ.அல்போன்ஸ்-திருச்சி

இயேசு கழுதைக் குட்டியின் மேல் அமர்ந்து யெருசலேமிற்குள் நுழைந்த பொழுது...
கூட வந்த கூட்டம் ‘தாவீதின் மகனுக்கு ஓசன்னா’ என்று ஆர்ப்பரித்தனர்.
யெருசலேமிற்குள் வந்தபொழுது நகர் முழுவதும் பரபரப்புற்று இவர் யார்? என்று கேட்டது (மத் 21:10) கேள்வி மிகவும் சூட்சமானது.
இந்தக் கேள்விதான் பலவழிகளில் பல நிலைகளில் பலரிடம் கேட்கப்படுகின்றது…
சிலரின் வாயிலாகப் பதிலும் வருகின்றது…
யெருசலேமின் இந்தக் கேள்விக்குப் பதிலாக இயேசுவை மூன்று தளங்களில் பார்க்கின்றனர்.
இயேசுவைக் கடவுளின் மகனாக…
யூதர்களின் அரசனாக…
மனிதனாக… மூன்று நிலைகளிலும் பார்க்கின்றனர்

இயேசுவின் பாடுகளுக்கு முந்திய விசாரணையில் சற்று ஆழ்ந்துக் கவனித்தோமென்றால் அவர் மேல் உள்ளக் குற்றங்களை விசாரிப்பதைவிட அவர் யார் என்று விசாரிப்பதுதான் விவாதபொருளாக… விசாரணையாக…உள்ளது.
தொடர்ந்து வாசிப்போம்…

கடவுளின் மகன்…
கடவுளின் மகனாகிய இயேசுகிறிஸ்து என்று தான் மாற்கு தன் நற்செய்தியைத் தொடங்குகின்றார்.
தலைமைச் சங்கத்திற்கு இயேசுவைக் கட்டி இழுத்துவருகிறார்கள்…
தலைமைக்குருக்களே இயேசுவின் மீது பொய் சான்றுகளை தேடலாயினர். பொய்சாட்சிகள் முன் வந்தும்; அவர்களுக்கு ஒன்றுமே கிடைக்கவில்லை. தலைமைக்குரு இயேசுவை நோக்கி “நீ இறைவனின் மகனாகிய மெசியாவோ?"....
இயேசு ‘நான் தான்’ என்றார்.
கைப்பாஸ் ஆடைகளை கிழித்துக்கொண்டு ஆவேச சீற்றம் கொண்டு "தேவநிந்தனை" என்றான் "சாவுக்குரியவன்" என்று ஆமோதித்தார்கள் அனைவரும்.
பிலாத்து பலமுறை இயேசுயுடன் தலைமைக்குருக்களுடன் விவாதித்தபின் இவனிடம் "குற்றம் ஒன்றும் காணவில்லை" என்றான் (யோவான் 19:6)
யூதர்கள் ‘எங்களுக்கு சட்டம் ஒன்று உண்டு அச்சட்டத்தின் படி அவன் சாகவேண்டும் ஏனெனில் தன்னை கடவுளின் மகன் என உரிமை கொண்டாடுகிறான. (யோவான் 19:7)
சட்டத்தின் முலமாக… அதிகாரத்தின் முலமாக… அந்த அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் முறைத் தவறும்போது அநீதி இழைக்கப்படும் பொழுது ஒரு சாமானியன் என்ன செய்வது?
தலைமைக்குருக்கள் சிலுவையில் அறைந்த இயேசுவை எள்ளி நகையாடி மெசியா இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கட்டும் கண்டு நம்புவோம் என்று கூறினர். இதைதான் தொடக்கத்தில் கடவுளின் மகனானால் கீழே குதியும் பிசாசுக் கூறியதை நினைவில் கொள்ளலாம்
நான் கடவுளின் மகன் என்றானே சிலுவையிலிருந்து இறங்கட்டும் என்று எள்ளி நகையாடினர் (மத் 27:44)
சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை வேடிக்கைப் பார்க்க வந்தவர்கள் கடவுளின் மகன் மெசியாவானால் தன்னையே காப்பற்றிக் கொள்ளட்டும் என்று ஏளனம் செய்தனர் (லூக் 232:35). சிலுவையில் தொங்கிய குற்றவாளியும் அதையே கூறினான் “நீ மெசியா அல்லவா? எங்களையும் காப்பாற்று" என்று பழித்தனர்(லூக் 23:39).
தொடக்கத்திலிருந்து முடிவுவரை இயேசுவைக் கடவுளின் மகன் என்று பழித்த பொழுதும் இயேசு ஏதும் செய்யவில்லை மௌனமாக இருந்தார்.
இயேசுவை முழுமையாகக் சிலுவையில் அறைந்து உயிர்விடும் வரை அருகில் நின்று கொண்டிருந்த நூற்றுவர்தலைவன் கூறுவான் “உண்மையில் இம்மனிதன் கடவுளின் மகனாயிருந்தார்” தான் கண்ட தெய்வத்தை எண்ணி உருகி நெதிழ்ந்து போகிறான்.
அது என்னமோ தெரியவில்லை யூதச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரின் மனதிலும் இருபத்துநாலுமணி நேரமும் இயேசுவை அழிக்கவேண்டிய நினைவே தான் நிலைக் கொண்டிருந்தது.
யூதர்களின் அரசர்
மத்தேயு தனது நற்செய்தியை ஒரு தேடுதலோடு தொடங்குகிறர்.
ஞானியர்கள் யெருசலேமிலமுக்கு வந்து யூதர்களின் அரசர் பிறந்திருக்கின்றாரே அவர் எங்கே? (மத் 2:3)
ஞானியர்களின் கேள்வியே முன்னுரையாகத் தொடங்குகின்றது.
யெருசலேம் வீதிகளில் கழுதைகுட்டியின் மீது வரும் இயேசு அங்கிருந்த கூட்டம் இஸ்ரயேலின் அரசர் வாழி என்று ஆர்ப்பரித்து வரவேற்றனர்.
யூதத்தலைமைச்சங்கத்தின் முன்பு நின்ற இயேசுவை கடவுளின் மகனா? என்று கேள்விகேட்டு அவரைச் சாவுக்கு தீர்வை அளித்தார்கள்.
பின்பு பிலாத்துவிடம் கூட்டிச் சென்ற பொழுது அவர்கள் இயேசுவின் மேல் சாட்டிய குற்றம் இவன் தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். அதனால் தான் பிலாத்துவின் முதல் கேள்வி ‘நீ யூதர்களின் அரசனா?” என்றான்.
இவரிடம் ஒருகுற்றமும் காணவில்லை என்று மறுபடி மறுபடிக் கூறினாலும் குருக்களும் மக்களும் ஏற்கவில்லை.
பிலாத்து இயேசுவை கொண்டுபோய் சாட்டையால் அடிக்கச் செய்தான். முள்ளால் ஒரு முடியைப் பின்னி அவர் தலையில் வைத்து சிவப்பு போர்வை உடுத்தி யூதர்களின் அரசே வாழி என்று சொல்லி கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர் வீரர்கள்.
பின்பு நீங்கள் யூதர்களின் அரசன் என்று சொல்லுகிறவனை நான் என்ன செய்யட்டும்? என்று கேட்டான்.
சிலுவை மரண தண்டனைத் தந்து தன் கையைக் கழுவிக்கொண்டார்.
சிலுவையில் அறையபட்ட இயேசுவின் தலைக்கு மேல் “இவன் யூதர்களின் அரசன் இயேசு” என்று எழுதிய பலகையை வைத்தனர். (மத் 27:37)
இஸ்ரயேலின் அரசனாம் இப்பொழுது சிலுவையிலிருந்து(மத் 27:42) இறங்கட்டும் நம்புவோம் என்று வீரர்கள் கூறினர்.
யூதர்களின் அரசனானால் "உன்னையே காப்பற்றிக்கொள்" என்று எள்ளி நகையாடினர்.(லூக் 23:37)
இதற்கப்பாலும் வலதுகள்வன் வெகு தெளிவாக வேண்டுகிறான் “இயேசுவே நீர் அரசுரிமையோடு வரும் போது என்னை நினைவுகூரும்” (லூக் 23:42)
இயேசு மனிதனாக :….
பிலாத்து இயேசுவை அழைத்து வெளியே வந்து மக்களைப் பார்த்து “பாருங்கள் இதோ மனிதன்” என்றான். அதற்கு மக்களும் குருக்களும் “சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும்” என்று கத்தினர் (யோவான்: 19:6)
கடவுளின் மகனாக,
யூதர்களின் அரசனாக,
மனிதனாக…. எந்த நிலைகளில் இயேசுவை பார்த்தாலும் அவருக்காக, காத்திருந்தது கல்வாரிமட்டுமே.
ஆரம்பத்தில் ஞானியர் மூன்று காணிக்கைகளை பொன், வெள்ளைபோளம், தூபவர்க்கம் இயேசுவுக்கு தந்தனர்
அது பொன்னால் அரசனுக்காகவும்
வெள்ளைபோளத்தால் மனிதனுகாக்கவும்
தூபவர்க்கதால் இறைவனுக்காவும் உள்ள குறியீடுகள்
என்று
இன்று பாடுகளின் போது தெரிகின்றதே.
தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவை கண்டு பயம் அதிகமாகும் போது அவர் மீது தாக்குதலும் பயங்கராமானவையாக இருக்கும். அங்கே முதலில் கொல்லப்படுவது மனிதநேயம்.
யூத வீரர்கள் இயேசுவின் மேல் துப்பவும் முகத்தை மூடிக் கன்னத்தில் அறைந்தனர் (மத்14:65) உரோம வீரர்கள் சாட்டையால் அடித்து முள் முடிசூடிக் கன்னத்தில் அறைமேல் அறை அறைந்தனர்.
தலைமைத் சங்க யூத விசாரணையிலும் உரோம அரசின் விசாரணையிலும் என்ன நடந்தது?
இரண்டிலும் விதிமீறல்கள் தானே
அவர்களுக்குச் சிலுவை மரம் தெரிந்ததே தவிர நியாயம் கண்ணில் படவே இல்லை பாடுகளின்பொழுது நாம் காணும் உணர்ச்சிமயான தருணங்கள்...
சட்டம் என்ற பெயரில் தலைமைச்சங்கம் முன் வைக்கும் கடைந்தெடுத்த அயோக்கியதனம்...
பிலாத்துவின் முடிவெடுக்க இயலாத தர்ம குழப்பம்...
ஏரோதின் ஏளனம்…
பேதுரு இயேசுவை மறுத்த கையறு நிலை…
இயேசுவின் சுயகட்டுபாடும் பொறுமையும் கொண்ட நிதானம்…
கள்வனின் கபடமற்ற விண்ணப்பம்…
வேடிக்கை பார்த்த மக்களின் ஏளனசிரிப்பு…
நூற்றுவர் தலைவனின் நம்பிக்கை…
எத்துணை முறை படித்தாலும் அதன் உன்னதம் குறைவதில்லை
இன்னும் எழிலோடு
ஏற்றத்தோடு
இன்னும் பொருத்தத்தோடு
இயேசுவின் பாடுகள்…
உயர் மனங்களில் சஞ்சரிக்கும்..

 மேலே செல்ல  அன்பின்மடல்-முகப்பு  தவக்காலச் சிந்தனைகள்