செப்டம்பர், 23 - ஞாயிறு

இன்றைய நற்செய்தி:

மாற்கு 9:30-37

"ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்"

அருள்மொழி:

அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், "ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்" என்றார்.
மாற்கு 9:35

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில், இயேசு, சீடர்கள் தங்களில் யார் பெரியவர் என்ற வாதாடிக்கொண்டிருந்ததைக் கவனித்த அவர் அவர்களை அருகில் அமரச்செய்து ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும். அத்தகையோர் என் தந்தையின் வான்வீட்டில் முதல்வராக இருப்பார்" என்று இயேசு உறுதியாகப் பதிவு செய்கின்றார். தலைமை என்பது அனைவரையும் தாழ்ந்தோர்- உயர்ந்தோர் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பணிச் செய்வதே இறைத் தொண்டு என்பது. இதற்காகவே இறைமகன் மனிதனார். அனைவரையும் ஒன்றிணைத்தார் என்பதே மறையுண்மையாகும்.

சுயஆய்வு :

  1. முதல்வர் என்பதின் பொருள் அறிகிறேனா?
  2. தொண்டு என்பதின் பொருள் அறிகிறேனா?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! அனைவரும் உம் மக்கள் என்னும் மனபக்குவத்துடன் தொண்டு புரியும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org