செப்டம்பர் 21-வெள்ளி

இன்றைய நற்செய்தி:

மத்தேயு. 9:9-13

"நேர்மையாரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.”

அருள்மொழி:

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். ஏனெனில் நேர்மையாரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்.
மத்தேயு. 9:13

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு மத்தேயுவை "தன் சீடராக என்னைப் பின்தொடர்ந்து வா" என்று அழைக்கின்றார். அவரும் பின் தொடர்கின்றார். அவரது வீட்டில் வந்து பந்தியிலமர்ந்து உணவை உண்ணும்போது பரிசேயர் "உம் போதகர் பாவிகளோடும், வரித்தண்டுபவர்களோடும் உணவு உண்பது ஏன்?" என்று கேட்டதும் இறைமகன் "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். இங்கே என்னோடு அமர்ந்திருப்போர் மீட்புப் பெற வேண்டும் என்று மண்ணகம் வந்தேன். என் வருகை நேர்மையாளர்களை நோக்கி அல்ல, பாவிகளை அழைத்து அவர்களுக்கு மீட்பு அளித்து என் தந்தையின் வானக விருந்தில் அவர்களையும் இணைப்பதே என் தந்தையின் விருப்பம். இதற்காகவே வந்தேன்" என்று விவேகத்தோடு பதிவு செய்கின்றார்.

சுயஆய்வு :

  1. நேர்மையாளர் என்று கூறுபவர் யார் ?
  2. பாவிகளை யார் என்று அறிகிறேன்?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே, உமது மீட்பின் திட்டத்தில் நான் ஒரு கருவியாகிடும் வரம் தாரும் ஆமென்.www.anbinmadal.org