செப்டம்பர், 12 - புதன்

இன்றைய நற்செய்தி

லூக்கா 6:20-26

"மானிடமகன் பொருட்டு உங்களை இகழ்ந்து பேசும்போது நீங்கள் பேறுபெற்றோர்.."

அருள்மொழி :

மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.
லூக்கா 6:22

வார்த்தை வாழ்வாக

இன்றைய நற்செய்தியில் பேறு பெற்றோர் யார்? கேடு பெற்றோர் யார்? என்று நல் ஆசானாக இங்கே பதிவுச் செய்கிறார். ஏழைகள்- அனாதைகள் பட்டினியால் வாடுபவர்கள், துன்புறுவோர் அனைவரும் பேறுபெற்றோர்கள். ஏனெனில் நீங்கள் அகமகிழ்ந்துவீர்கள். மானிடமகன் பொருட்டுபடும் துன்பங்கள் யாவும் உங்களுக்கு இன்பமாய் மாறும். ஏனெனில் நீங்கள் என் பொருட்டு எல்லாத் துன்பங்களையும் அனுபவித்து விட்டீர்கள். விண்ணுலகில் உங்களுக்கு மிகுந்த கைம்மாறுக் கிடைக்கும். செல்வந்தர்களே ஐயோ கேடு ஏனெனில் இவ்வுலகில் எல்லாம் அனுபவித்து விட்டீர்கள் என்று இன்று சுயநலத்தோடு வாழும் மக்களையும், பேராசையுடன் அடுத்தவரை அழித்துத் தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று இறைவனின் கட்டளைகளை மீறி நடக்கும் அனைவருக்கும் என்ன நிகழும் என்று கூறுகிறார்.

சுயஆய்வு:

  1. இறைமகனின் பொருட்டு என் செயல்பாடு யாது?
  2. இவ்வுலக வாழ்வில் என் பொதுநலம் யாது?

இறைவேண்டல்:

அன்பு இயேசுவே, உம் பணியின் பொருட்டு ஏழும் துன்பங்களைத் தாங்கும் வரம் தாரும். ஆமென்.


www.anbinmadal.org