arulvakku

ஆகஸ்ட் 30

இன்றைய நற்செய்தி:

மத்தேயு 16:21-27

" ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்."

அருள்மொழி:

மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வான தூதர்களுடன் வரப்போகிறார்: அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக்கேற்பக் கைம்மாறு அளிப்பார்.
மத்தேயு 16: 27

வார்த்தை வாழ்வாக:

இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்கு இறையரசின் காட்சியைக் காணும் பேறு பெற்றவர்கள் என்று வீர முழக்கமிடுகின்றார். ஏனெனில் அவர்கள் இறை மகனின் போதனைகளைத் தன் உடன் பணியாளர்களாகச் சமுதாயத்தில் தடம் பதித்தார்கள். அதற்கேற்பட்ட துன்பத் துயரங்களை மேற்கொண்டார்கள். இயேசுவே உணமையான இறைமகன் என்பதை என்கும் பறைசாற்றினார்கள். அவரே மண்ணக மாந்தரின் விடுதலை நாயகன் என்பதை மக்கள் உணரச் செய்தார்கள். எனவே தான் இயேசு எந்த ஒரு கோவிலுக்குள் முடங்கிவிடவில்லை. வமுதாயத்தை நோக்கிப் பலமக்களைச் சந்தித்து அவர்களைதுப் பிணி, துன்பம் அனைத்தையும் போக்கி அனைவரையும் சமத்துவமாக வாழ அழைத்தார். இதுவே இறைமகன் கண்ட இறையரசு.

சுயஆய்வு :

  1. இறையரசை மண்ணகம் காண எனது பங்கு என்ன?
  2. அதனைச் சுவைக்க என் செயல்பாடு என்ன?

இறை வேண்டல்:

அன்பு இயேசுவே! உமது இறையரசை இன்றைய மக்கள் காணும் வரம் அருள வேண்டுகிறேன். ஆமென்.


www.anbinmadal.org